உள்ளாட்சித் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

 

உள்ளாட்சித் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதற்கு மறுநாள் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தமாக 97,831 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனிடையே, அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக 18004257072, 18004257073, 18004257074 என்ற புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 300 புகார்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்களின் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததால் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் மாலை நடைபெற உள்ளதாக்வும் வேட்பாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.