குற்றப்பின்னணியில் இருந்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி – காவல்துறை அறிவிப்பு!

குற்றப்பின்னணியில் இருந்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி – காவல்துறை அறிவிப்பு!

திருவள்ளூரில் குற்றப்பின்னணியில் தொடர்புடையவர்களை குற்றப்பட்டியலில் இருந்து விடுவிக்கும் முகாம் இன்று நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. திருட்டு, கள்ளச்சாராயம், அடிதடி என பல வழக்குகளில் சிக்கிய நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, குற்றப்பின்னணியில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக அவர்கள் எந்த பிரச்னையிலும் ஈடுபடாமல் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவர்களை குற்றப்பட்டியலில் இருந்து நீக்க முடிவெடுத்த அதிகாரிகள், அதற்கான முகாமை இன்று நடத்தினர்.

குற்றப்பின்னணியில் இருந்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி – காவல்துறை அறிவிப்பு!

அதில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற அந்த முகாமில் அம்மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டதோடு, குற்றப்பட்டியலில் இருந்தவர்களும் பங்கேற்றனர். அப்போது பேசிய அதிகாரிகள், நன்னடத்தை காரணமாக குற்றப்பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் இதற்கு மேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

குற்றப்பின்னணியில் இருந்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி – காவல்துறை அறிவிப்பு!

மேலும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொழில் தொடங்க மாவட்ட காவல்துறை சார்பில் உரிய ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தேவைப்பட்டால் கடனுதவிக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட, நபர்கள் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்போம் என உறுதிமொழி ஏற்றுதோடு கடனுதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.