25 புதிய பிரிட்ஜ் மாடல்கள் -தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த லாய்டு திட்டம்!

 

25 புதிய பிரிட்ஜ் மாடல்கள் -தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த லாய்டு திட்டம்!

நுகர்வோர் மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹேவல்ஸ், லாய்டு பிராண்டில் புதிதாக 25 பிரிட்ஜ்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் லாய்டு பிராண்டை கையகப்படுத்திய ஹேவல்ஸ் நிறுவனம், அந்த பிராண்டிலும் பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக 25 பிரிட்ஜ்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

25 புதிய பிரிட்ஜ் மாடல்கள் -தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த லாய்டு திட்டம்!

டைரக்ட் கூல் தொழில்நுட்பத்திலான இன்வெர்டர் டெக்னாலஜி பிரிட்ஜ்கள், பிராஸ்ட் ப்ரீ, சைட் பை சைட் பிரிட்ஜ்கள் என மொத்தம் 25 புதிய மாடல் பிரிட்ஜ்களை லாய்டு பிராண்டில் ஹேவல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவை மாடலுக்கேற்ப 190 லிட்டர் முதல் 587 லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ்களாக அறிமுகமாகி உள்ளன. எரிசக்தி திறன் கழகத்தின் 2020 ரேட்டிங் விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இவற்றின் விலை 10 ஆயிரத்தில் தொடங்கி 85 ஆயிரம் வரை கிடைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து பிரிட்ஜ்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ள ஹேவல்ஸ் நிறுவனம், வரும், தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக 25 பிரிட்ஜ்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

25 புதிய பிரிட்ஜ் மாடல்கள் -தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த லாய்டு திட்டம்!

ஏற்கனவே எல்இடி டிவி, ஏசி, வாசிங்மெஷின் ஆகிய பொருட்களை விற்பனை செய்து வரும் லாய்டு பிராண்டு தற்போது பிரிட்ஜ் அறிமுகப்படுத்தியதன் மூலமாக, நுகர்வோர் சாதனங்களுக்கான ஒரு முழுமையான பிராண்டாக தன்னை அந்நிறுவனம் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்