விஜயகாந்த் காலில் விழுந்த அரசியல் கட்சி தலைவர்கள் : எல்.கே.சுதீஷ் வெளியிட்ட கார்ட்டூனால் பரபரப்பு!

 

விஜயகாந்த் காலில் விழுந்த அரசியல் கட்சி தலைவர்கள் : எல்.கே.சுதீஷ் வெளியிட்ட கார்ட்டூனால் பரபரப்பு!

தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக என கட்சிகள் பல கூட்டணி குறித்தும்,தேர்தலில் தனித்து களம் காணவும் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக -தேமுதிக கூட்டணி குறித்தும் அண்மையில் விவாதிக்கப்பட்டது.

விஜயகாந்த் காலில் விழுந்த அரசியல் கட்சி தலைவர்கள் : எல்.கே.சுதீஷ் வெளியிட்ட கார்ட்டூனால் பரபரப்பு!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, தேமுதிக தனித்துப் போட்டியிட கட்சி தொண்டர்கள் விருப்பப்படுவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகள் ஆக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால் அவர்கள் இருக்கும் போதே எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்த விஜயகாந்த் இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விஜயகாந்த் காலில் விழுந்த அரசியல் கட்சி தலைவர்கள் : எல்.கே.சுதீஷ் வெளியிட்ட கார்ட்டூனால் பரபரப்பு!

இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்ற கார்ட்டூனை பதிவிட்டார். பதிவிட்ட சில நிமிடங்களில் அக்கார்ட்டூனை சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

விஜயகாந்த் காலில் விழுந்த அரசியல் கட்சி தலைவர்கள் : எல்.கே.சுதீஷ் வெளியிட்ட கார்ட்டூனால் பரபரப்பு!

ஏற்கனவே தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா அல்லது தனித்து நிற்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எல்.கே. சுதீஷின் இந்த பதிவு அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது