பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தி, தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம்.. மோடிக்கு கடிதம் எழுதிய சிராக் பஸ்வான்..

பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தி, தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம்.. மோடிக்கு கடிதம் எழுதிய சிராக் பஸ்வான்..

பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம் என பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான எல்.ஜே.பி. கட்சி தலைவர் சிராக் பஸ்வான் கடிதம் எழுதியுள்ளார்.

பீகாரில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மற்றும் லோக் ஜன்சக்தி ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் லோக்ஜன்சக்தி கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தி, தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம்.. மோடிக்கு கடிதம் எழுதிய சிராக் பஸ்வான்..
சிராக் பஸ்வான்

இந்த சூழ்நிலையில் லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வான் முதல்வர் நிதிஷ் குமார் அரசாங்கத்தை குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிராக் பஸ்வான் அந்த கடிதத்தில், பீகாரின் அரசாங்கத்தின் செயல்பாட்டில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் அது சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் பீகார் அரசியல் நிலவரத்தை குறித்து ஆய்வு செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தி, தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம்.. மோடிக்கு கடிதம் எழுதிய சிராக் பஸ்வான்..
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்குள்ளே மோதல் ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டணி பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒன்றாக சந்திக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, நிதிஷ் குமாரை சந்தித்து தேர்தல் தொடர்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.