கண்ட இடத்துல ,கண்ட நேரத்துல சாப்பிட்டா ,எந்த உறுப்பு கண்டமாகும் தெரியுமா ?

 

கண்ட இடத்துல ,கண்ட நேரத்துல சாப்பிட்டா ,எந்த உறுப்பு கண்டமாகும் தெரியுமா ?

கல்லீரல்  மட்டும்தான் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டால்கூட அது சீராகத் தன் பணியைச் செய்துகொண்டே இருக்கும். அதில் இருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துவிட்டால்கூட, சிறிது நாள்களில் தானே வளர்ந்துவிடும். ஆனால், இந்தக் கல்லீரலை நாம் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை. அதற்கும் ஓர் அளவு உண்டு. கல்லீரல் பழுதடையும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மாற்றுக் கல்லீரல் பொறுத்துவதென்பது சாமானியர்களால் முடியாத காரியம். பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதே இதற்குக் காரணம்.

கண்ட இடத்துல ,கண்ட நேரத்துல சாப்பிட்டா ,எந்த உறுப்பு கண்டமாகும் தெரியுமா ?

கல்லீரல் கெட்டால்  ஆரம்பத்தில் எந்த அறிகுறியில்லாமலிருக்கும் . ஆனால்  குமட்டல், வாந்தி, வீக்கம், பொதுவான பலவீனம் மற்றும் சோர்வு அல்லது பசியின்மை போன்ற அறிகுறிகளைக் சிலர் கொண்டுள்ளனர். நோய் அதிகரிக்கும்போது, ​​நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை,கால்கள் வீக்கம், இரத்த வாந்தி, கருப்பு மலம் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3-5% கல்லீரல் சிரோசிஸ் கல்லீரல் புற்றுநோயை உருவாக்குகிறது.

தொடர் மதுப்பழக்கத்துக்கு ஆளானவரா? அவருக்கு கல்லீரலில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத்தான் `ஹெபடைட்டிஸ்’ (Hepatitis) என்கிறார்கள். இந்த வீக்கத்துக்கு என்ன காரணம்? ஹெபடைட்டிஸ் வைரஸ் ஏ முதல் இ வரை காரணமாகலாம். இவற்றிலும் ஹெபடைட்டிஸ் பி-யும் சி-யும்தான் மிக மோசமானவை; சரியான நேரத்தில் கவனிக்காமல்விட்டால் உயிரைப் பலி வாங்கக்கூடியவை. மற்ற ஹெபடைட்டிஸ் பிரிவு வைரஸ்கள் அதிகபட்சமாக மஞ்சள்காமாலை நோயை ஏற்படுத்திவிடும். கண்ட நேரத்தில், கண்ட சாப்பாடு, சுகாதாரமற்ற தண்ணீர் பருகுவது இவைதான் இந்த வைரஸ் தாக்குதலுக்குக் காரணமாகின்றன. சுத்தமான தண்ணீர், ஆரோக்கியமான உணவு இவற்றில் கவனம் செலுத்தினாலே போதும்… உங்கள்  கல்லீரலை காப்பாற்றிவிடலாம் .