புத்தாண்டு – ஒரேநாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை; முதலிடத்தை பிடித்த மண்டலம் இதுதான்!

புத்தாண்டு – ஒரேநாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை; முதலிடத்தை பிடித்த  மண்டலம் இதுதான்!

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு – ஒரேநாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை; முதலிடத்தை பிடித்த  மண்டலம் இதுதான்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல் படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைய குறைய தளர்வுகளும் அளிக்கப்பட்டது. இதில் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் அதுவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

புத்தாண்டு – ஒரேநாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை; முதலிடத்தை பிடித்த  மண்டலம் இதுதான்!

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டமாக ‘குடி’மகன்கள் நேற்று ஒரேநாளில் மதுவை வாங்கி தீர்த்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.48.75 கோடி, கோவை மண்டலத்தில் 28.40 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.28.10 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.27.30 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.26.49 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.