மதுபானங்கள் விலையை உயர்த்தியதால் வாங்குவதை குறைத்த குடிமகன்கள்… கர்நாடக அரசு போட்ட கணக்கு தப்பா போச்சு….

 

மதுபானங்கள் விலையை உயர்த்தியதால் வாங்குவதை குறைத்த குடிமகன்கள்… கர்நாடக அரசு போட்ட கணக்கு தப்பா போச்சு….

கர்நாடகா அரசு இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விலையை உயர்த்தியதால் அதன் விற்பனை கடுமையாக சரிந்தது. மதுபானம் மீதான வரியை உயர்த்தினால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில அரசின் திட்டம் கைகூடவில்லை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 31ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த 4ம் தேதி முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியது. மேலும் மதுபான கடைகளை திறந்து கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கர்நாடகாவில் கடந்த 4ம் தேதி முதல் மீண்டும் மது கடைகள் திறக்கபட்டன.

மதுபானங்கள் விலையை உயர்த்தியதால் வாங்குவதை குறைத்த குடிமகன்கள்… கர்நாடக அரசு போட்ட கணக்கு தப்பா போச்சு….

மது கடைகள் திறக்கப்பட்டவுடன் குடிமகன்கள் அங்கு குவிந்தனர். முதல் 3 நாட்கள் மது பானங்கள் விற்பனை கர்நாடகாவில் களை கட்டியது. குறிப்பாக கடந்த 6ம் தேதியன்று மட்டும் ரூ232 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. லாக்டவுனால் வருவாய் இல்லாமல் தவித்து வந்த கர்நாடக அரசுக்கு மது வாயிலான வருவாய் பெரிய ஆறுதலாக இருந்தது. மேலும் மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தினால் அரசுக்கு கஜானாவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில அரசு இந்திய தயாரிப்பு மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரியை உயர்த்தியது. இதனால் பிராண்டை பொறுத்து ஒரு மது பாட்டிலின் விலை ரூ.50 முதல் ரூ.1,000 வரை உயர்ந்தது. கடந்த 7ம் தேதி முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.

மது பானங்களின் விலை உயர்ந்ததால் குடிமகன்கள் வாங்குவதை குறைத்து விட்டனர். கடந்த 6ம் தேதி ரூ.232 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகி இருந்தது. ஆனால் கடந்த 20ம் தேதியன்று ரூ.60 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி இருந்தது. கடந்த 6ம் தேதியன்று 38 லட்சம் லிட்டர் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனையாகி இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 25 லட்சம் லிட்டர் மட்டுமே இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனையானது. கலால் வரி துறையின் வருவாய் வசூல் சரிவு மாதந்திர சராசரி வருவாய் இலக்கான ரூ.1,900 கோடியை தவற விடுவதோடு, மே மாதத்தில் ரூ.400 கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று அம்மாநில அரசு கவலை கொண்டுள்ளது.

மதுபானங்கள் விலையை உயர்த்தியதால் வாங்குவதை குறைத்த குடிமகன்கள்… கர்நாடக அரசு போட்ட கணக்கு தப்பா போச்சு….

மதுபானங்கள் மீதான வரி உயர்வு குறித்து கர்நாடக மதுபானம் மற்றும் டிஸ்லிட்டரிஸ் சங்கத்தின் தலைவர் அருண் குமார் பார்சா கூறுகையில், வரியை உயர்த்துவது பொன் முட்டைகளை இடும் வாத்தை கொல்வது போன்றது. இநத நடவடிக்கை நீண்ட காலத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார். கலால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கூடுதல் கலால் வரி உயர்வு மட்டும் மதுபானங்கள் விற்பனைக்கு சரிவுக்கு காரணம் அல்ல. மாநிலத்தில் மொத்தம் 10,050 மதுபான கடைகள் உள்ளன, அதில் 4,880 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மற்றொரு முக்கிய காரணம் பெரிய அளவில் புலம்பெயர்ந்தவர்கள் வருகை என தெரிவித்தார்.