ஓடிடி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

ஓடிடி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

ஓடிடி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. சமீப காலமாக ஓடிடி தளங்களின் வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதால், அதனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதன் படி, ஒடிடி தளங்களில் படத்தை வெளியிடப்படுவதற்கான கொள்கை மற்றும் விதிமுறைகளை மத்திய அமைச்சகம் வகுக்கும்.

ஓடிடி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

இந்த நிலையில் ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில், தனியாக கட்டுப்பாடு அமைப்பு என எதுவும் இல்லை என்றும் ஒடிடியை கட்டுப்படுத்த தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

மேலும், டிஆர்பி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதன் பரிந்துரையின் பேரில் டிஆர்பி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.