திருமணத்தில் நாட்டமிருந்தாலும் செய்து கொள்ள மனமில்லை; என்ன செய்வது? நேயரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

 

திருமணத்தில் நாட்டமிருந்தாலும் செய்து கொள்ள மனமில்லை; என்ன செய்வது? நேயரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ‘ஒரு தீர்வு சொல்லட்டா #Friends’ என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர் குமரன் குமணன் வாரா வாரம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

கேள்வி: எனக்கு வயது 26. எனது வீட்டில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி நாள்தோறும் வற்புறுத்தி வருகின்றனர். எனக்கு திருமணத்தில் நாட்டம் இருந்த போதிலும், திருமணம் செய்து கொள்ள மனமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமாக உள்ளது?
 
பதில்: இது எல்லாருக்கும் இருக்குற குழப்பம் தான் ..ஒரு வேளை உங்க வீட்டுல உங்களுக்குன்னு ஒருத்தரை பார்த்து வைச்சு இருந்தா ,அது யாரா இருந்தாலும் அவங்கள சந்திக்க முயற்சி பண்ணுங்க ..ஒரு வேளை உங்க மனசு மாறலாம் ..அப்படி இல்லைன்னா உங்க குடும்பத்துல உள்ள பெரியவங்ககிட்ட உங்க நிலைமையை எடுத்து சொல்லுங்க …உங்களுக்கு நாட்டம் இருக்கு ஆனால்  தயக்கமும் இருக்குன்னு தெளிவுப்படுத்துனது ரொம்ப நல்லது ..இந்த தெளிவு, அந்த தயக்ககத்தை ரொம்ப சீக்கிரமா உடைக்கும் …26 வயசுதான்கிறதால நீங்க நிதானமா இதை பற்றி யோசிக்கலாம் ..(நீங்க ஆணா பெண்ணான்னு குறிப்பிடல) ..இருந்தாலும் என் கருத்து இதுதான் .

அதே சமயம் ,இதனால உங்க மற்ற வழக்கமான செயல்கள் பாதிக்காம பார்த்துக்குறது உங்க பொறுப்பு. எந்த காரணத்துக்காகவும் நிதானத்தை இழந்துறாதீங்க. உங்களுக்கு நல்லது எதுவோ ,அது நடக்க வாழ்த்துக்கள்….. வெல்வோம் .