எந்தெந்த நோய் எப்ப தாக்குமோன்னு ‘திக் திக்’ னு இருக்கிறவங்களை காக்கும் சுக்கு

இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.
சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும்.
‘திரிகடுகம்‘ எனும் நீதிநூல் “சுக்கு மிளகு திப்பிலி” என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட ஒரு நூலாகும். திரிகடுகத்தில் முதலில் உள்ள பொருளான சுக்கு பற்றி பார்ப்போம்
“சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்ல… சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லனு சொல்லுவாங்க! ஒவ்வொன்னா சொல்றேன் கேட்டுக்கோ! தொண்டைகட்டு, குரல்கம்மல், காதடைப்பு, கபம் இப்படி பல நோய்க்கு சுக்கு ஒரு நல்ல மருந்தா இருக்கு. அஜீரணம், வயிற்று பொருமல், வாய்வு தொல்லைகளுக்கு சுக்கு பானம்(சுக்கு காபி) சிறந்த மருந்து. பசி உண்டாகாமல் இருப்பவர்க்கு பசி உண்டாக்க சுக்குப்பொடியை 3 விரலளவு எடுத்து அப்போது கறந்த பாலில் கலந்து கொடுத்து வரணும்.
பிள்ளைபெற்ற தாய்க்கு கருப்பை இயல்புநிலை அடைய, பால்சுரப்பு தூண்ட, சுக்கும் சில மருத்துவப் பொருட்களும் சேர்த்து செய்யப்பட்ட ‘சௌபாக்கிய சுண்டி லேகியம்‘ நல்ல பலன் தரும்.
வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.
தொண்டைக்கட்டு மற்றும் குரல்கம்மலுக்கு: சுக்கை மென்று சாற்றை மட்டும் விழுங்க வேண்டும். சுக்கு, மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து தொண்டையில் பூசி (வெளிப்புறமாக) வரலாம்.
குற்றிருமலுக்கு: சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1கிராம் அளவுகு தேனில் குழைத்துண்ணலாம்.
காதடைப்பு, கபம்: சிறு துண்டு சுக்கை சிதைத்து, துணியில் கட்டி காதினுள் வைக்கவும்
பூரான்-தேள் கடி விஷம் முறிக்க: சுக்கு சிறு துண்டு, மிளகு 10, வெற்றிலை 1 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.


