நம்மை கடுகடுப்பாய் மாற்றும் எந்தெந்த நோய்களை கடுக்காய் பொடி குணமாக்கும் தெரியுமா?

 

நம்மை கடுகடுப்பாய் மாற்றும் எந்தெந்த நோய்களை கடுக்காய் பொடி குணமாக்கும் தெரியுமா?

கடுக்காய், மிக அற்புதமான ஒரு மூலிகை உணவு. மிக மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்களிலும், நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் கடுக்காயின் பலன்கள் எண்ணற்றவை! ‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ என உடல் நலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

பத்து கடுக்காய் ஊறக்கூடிய அளவில் ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிய வெந்நீரில் ஆழாக்களவு எடுத்து சீசாவில் விட்டு அதில் 20 கிராம் எடை இந்துப்பைத் தான் பண்ணிப் போட்டு நன்றாகக் கரையச் செய்ய வேண்டும். உப்பு முழுவதும் கரைந்த பின்,

நான்கு எலுமிச்சம் பழச்சாற்றை அதில்விட்டு நன்றாகக் கலந்து, அந்தத் தண்ணீரை சல்லடை மூலம் வடிகட்டி எடுத்து சீசாவை வெந்நீர் விட்டுக் கழுவிய பின் மறுபடி இந்தத் தண்ணீரை அதில் விட்டு நன்றாகப் பருத்த துளையேதுமில்லாத சுத்தமான கடுக்காயில் பத்து எடுத்து. அதை வெந்நீரில் கழுவிவிட்டு, இந்தத் தண்ணீரில் போட்டு சீசாவின் மூடியை முடிதினசரி வெய்யிலில் வைத்து எடுத்து. 11ம் நாள் உபயோகப்படுத்த வேண்டும்

நம்மை கடுகடுப்பாய் மாற்றும் எந்தெந்த நோய்களை கடுக்காய் பொடி குணமாக்கும் தெரியுமா?

கடுக்காய் பொடி பயன்கள்

இந்த கடுக்காயில் கழற்சிக்காயளவு எடுத்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பித்த கிறுகிறுப்பு மாறும்.

கண்பார்வை தெளிவடையும்.

காய்ச்சல் குணமாகும்.

இருமல் நிற்கும்.

மலத்தை இளக்கும்.

மலச்சிக்கல் தீரும்.

கைகால் குடைச்சல் குணமாகும்.

பல்வலி குணமாகும்.

தொண்டைக் கட்டு விலகும்.

நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.

உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும்.

உடல் பலம் பெறும் உடலிலுள்ள விஷக் கிருமிகள் அழியும்.

நோயற்று வாழ முடியும்.

கடுக்காய் நீர் பயன்கள்

கடுக்காய்ப் பொடி 1 தேக்கரண்டி தண்ணீரில் சேர்த்து மாலை நேரத்தில் குடித்து வந்தால் மாலையில் அருந்திவந்தால் காமாலை நோய் நீங்கும்.

முன் சொன்னது போல சீசாவில் கடுக்காய்களைத் தயார் செய்துக் கொண்டு, நன்றாக கொதிக்க வைத்து வெந்நீரில் 20 கிராம் எடை இந்துப்புப் பொடியும், நான்கு எலுமிச்சம்பழச் சாறும் விட்டுக் கலக்கி வடிகட்டி சீசாவில் விட்டு தேவையான அளவு இஞ்சியைத் தோல் சீவி உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுத் தெளியவைத்து அடியில் சுண்ணாம்புத் தேங்கியபின் தெளிவான சாற்றை மட்டும் இறுத்து,

அதில் இரண்டு அவுன்ஸ் அளவு எடுத்து சீசாவில் போட்டு 20 கிராம் எடைச் சீரகத்தை இடித்துப் பொடி செய்து அதையும் இந்த நீரில் கொட்டிக் கலக்கி, கடுக்காயைப் போட்டு ஊறவைத்து தினசரி ஒரு தட்டில் காயை மட்டும் எடுத்து வைத்துக் காய வைத்து மறுபடி நீரில் போட்டு மூடி விடவேண்டும் இந்தவிதமாகப் பத்துநாள் செய்துவிட்டு, பதினோராம் நாள் உபயோகப்படுத்தலாம். இந்த சமயம் காயின் மேலும் மீதமுள்ள நீரிலும் ஈ, கொசு உட்காரமல் கவனமாக மூடி வைக்க வேண்டும்.

திரிபலா எனும் மருந்தை 48 நாட்கள் தொடர்ந்து பாலிலோ வெந்நீரிலோ சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ முடியும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து திரிபலா தயார் செய்கிறார்கள். இப்படியாக கடுக்காயின் பலன்கள் அளவற்றதும், விலை மதிக்க முடியாதவையும் ஆகும்.