அசைவ உணவு பிரியர்கள் கவனத்திற்கு! : நீங்களும் செய்யலாம் சுவையான மீன் பிரியாணி!

 

அசைவ உணவு பிரியர்கள் கவனத்திற்கு! : நீங்களும் செய்யலாம்  சுவையான மீன் பிரியாணி!

பிரியாணி வகைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதிலும் குறிப்பாக  மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது.

பிரியாணி வகைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதிலும் குறிப்பாக  மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானதும் கூட. அதனால் மீனை கொண்டு சுவையான  பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க!

 

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி –2 கப்

தக்காளி விழுது – 1 கப்

தேங்காய் பால் – 1 கப்

தண்ணீர் – 2கப்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

முள் நீக்கிய மீன்துண்டுகள் – 10

இஞ்சி – சிறுதுண்டு

பூண்டு – 8

தயிர் – 1கப்

பச்சை மிளகாய் – 4

கொத்தமல்லி இலை – 1 கப் (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

வெங்காயம் – 2 (நறுக்கியது)

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

ஊற வைக்க:

இஞ்சி, பூண்டு, பச்சை  மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதில் மீனை ஊற வைக்கவும்.

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரிசியை மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் தக்காளி விழுது, தேங்காய்பால், தண்ணீர் ஒன்றை கப் சேர்க்கவும். பின்பு இதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பாத்திரத்தை மூடி அரிசியை வேக வைக்கவும். குறைந்த தீயில்  அரைவேக்காடாக இருந்தால் போதுமானது.

மீன் செய்முறை:

ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். மசாலாவில் ஊற வைத்த மீனை சேர்த்து சிறிது நீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும். வேக வைத்த பிரியாணி அரிசியை இதனுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறினால் மீன் பிரியாணி ரெடி.