வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்கள் நினைக்கவே கூடாத உணவுகள் எதை தெரியுமா?

 

வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்கள் நினைக்கவே கூடாத உணவுகள் எதை தெரியுமா?

வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்கள் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி சாதத்தை நிறுத்தினாலே கார்போஹைட்ரேட் எடுக்கும் அளவு குறைந்துவிடும் என்று பலரும் நினைக்கின்றனர்.

வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்கள் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி சாதத்தை நிறுத்தினாலே கார்போஹைட்ரேட் எடுக்கும் அளவு குறைந்துவிடும் என்று பலரும் நினைக்கின்றனர். இங்கே காரபோஹைட்ரேட் அதிகமாக உள்ள சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
மாம்பழம்:
மாம்பழ சீசன் விரைவில் வர உள்ளது. மாம்பழத்தைப் பார்த்ததும் ரவுண்ட் கட்டி சாப்பிடுபவர்கள் அதிகம். மாம்பழத்தில் அதிக கலோரி உள்ளது. 165 கிராம் பழத்தில் 28 கிராம் கார்போ உள்ளதாம். என்னதான் சருமம், இதயத்துக்கு நல்லது என்றாலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மாமம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

weight loss.jpg1.jpg

வாழை:
செரிமானத்துக்கு உதவும், தினமும் சாப்பிடக் கூடிய பழம்தானே என்று பலரும் எண்ணுகின்றனர். ஒரு நடுத்தர சைஸ் வாழைப் பழத்தில் 27 கிராம் கார்போஹைட்ரேடட் உள்ளதாம். நார்ச்சத்து, வைட்டமின் பி6, பொட்டாசியம் நிறைந்த, செரிமானம், இதயத்துக்கு நன்மை செய்யும் பழம் என்றாலும் வெயிட் கெயின் ஆகிடும் ஜாக்கிரதை!

weight loss.jpg2.jpg

உலர் பழங்கள்:
உலர் திராட்சை, பேரீச்சை அதிக ஆற்றலைத் தரும் உணவுகள் ஆகும். இவற்றில் அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தும், ரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவும், எலும்புகளை வலுப்படுத்தும். ஆனால் ஒரு கிண்ணம் உலர் பழங்களில் 28 கீராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் உள்ளது.

weight

பால்:
பாலில் கூட அதிக கலோரி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? 240 மி.லி பாலில் 12-13 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் உள்ளதாம். கால்சியம், பொட்டாசியம், பல்வேறு வைட்டமின்கள் கொண்ட பால் ஊட்டச்சத்து மிக்க பானம் என்றாலும் வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்கள் இதில் உள்ள கலோரியையும் கணக்கில் எடுத்துக்கொள்வது நல்லது.

milk