இஷ்டப்பட்டதை சாப்பிட்டுகிட்டே கஷ்டப்படாமல் எடை குறைக்கும் வழிகள்

 
weight loss

உடல் எடையை  குறைத்தே ஆக வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் எதை எதை சாப்பிடக்கூடாது என்பதை முதலில் சொல்கிறேன்.  சாலையோரக்கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது. ஓட்டல்களில் விற்கும் பொருட்களை வாங்கி  சாப்பிடக்கூடாது. பேக்கரியில் விற்கும் பொருட்களில் பிரெட், ரஸ்க் தவிர பாக்கி எல்லா பொருட்களுமே உடல் எடையை கூட்டுபவைதான். எந்த ஃபிளேவரில் செய்து இருந்தாலும் கேக் அயிட்டம் எதையும் தொடவே கூடாது. கேக்கில் உள்ள மைதா, ஜீனி, டால்டா, வெண்ணெய்  கிரிம், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள், சாக்கலேட் வெண்ணிலா போன்ற ஃபிளேவர்கள் அனைத்தும் கெடுதல்தான்.


குளிர் பானங்கள் குடிக்கக்கூடாது. அது எவ்வளவு பெரிய கம்பெனி தயாரித்து இருந்தாலும் அது உடல் எடையை கூட்டும் ஒரு கெடுதலான பொருள்தான். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது.  எக்ஸ்பயரி தேதி அதிகம் உள்ள பேக்கேஜில் அடைக்கப்பட்ட எந்த உணவு பொருளையும் சாப்பிடக்கூடாது. லேஸ், குர்குரே, பிங்கோ போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் எந்த வகையையும் சாப்பிடக்கூடாது. உப்பு உடலில் உள்ள நீர்ச்சத்தை உறியக்கூடியது. அதனால் உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை உண்ணக்கூடாது. 

Weight Loss

ஒரு ஆரோக்கியமான ஆணுக்கு தினமும் 2500 கலோரிகள் தேவைப்படுகின்றன அதே போல் ஒரு ஆரோக்கியமான பெண்ணிற்கு தினமும் 2000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

உடல் எடையை  குறைக்க வேண்டுமென்றால் இந்த கலோரிகளின்  அளவு குறைக்க பட வேண்டும்.

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களின் உடல் எடையை குறைக்க  தினமும் 500 கலோரிகளை குறைக்க வேண்டும். (2000-500=1500).

நீங்கள் தினமும் 500 கலோரிகளை குறைத்தீர்கள் என்றால் இரண்டு வாரங்களில் உங்கள் எடை ஒரு கிலோ குறைந்திருக்கும்.

எப்படி தினமும் 500 கலோரிகள் குறைப்பது

தினமும் உங்கள் உணவில் 500 கலோரிகள் குறைத்து வந்தால் இரண்டு வாரங்களில் உங்கள் எடை ஒரு கிலோ குறைந்திருக்கும் .

தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்து வந்தால் 500 கலோரிகள் குறையும். இரண்டு வாரங்களில் உங்கள் எடை ஒரு கிலோ குறைந்திருக்கும் .

இந்த இரண்டையும் (உணவு கட்டுப்பாடு+நடைப்பயிற்சி ) சேர்த்து செய்து வந்தால் உங்கள் எடை இரண்டு வாரங்களில் உங்கள் எடை  இரண்டு கிலோ குறைந்திருக்கும்.

இரண்டு வாரங்களில் இரண்டு கிலோ என்றால்  ஒரே மாதத்தில் நான்கு கிலோ எடை குறைக்கலாம்.

உடல் எடையை  குறைக்க உதவும் உணவுகள் 

உடல் எடையை குறைக்க நார்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம்.

நார்சத்து உள்ள உணவுகள் பசியை குறைத்து விடுவதால்  உணவின் தேவையும்  குறைகிறது இதனால் நீங்கள் குறைவான அளவு உணவை சாப்பிடுவதால் கலோரிகள் குறைந்து உடல் எடை குறையும் மேலும் நார்சத்துகள் உடலில் கொழுப்பு அதிகம்  சேராமல் காக்கும்.

உங்களின் உணவு தட்டில் ஒரு கப்  சாதம் மட்டும்  வைத்து கொண்டு

காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

தினமும் உங்கள் மதிய உணவில்  ஏதாவது ஒரு கீரை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் ஆரஞ்சு அத்திபழம்  போன்ற பழங்கள் சாப்பிடுங்கள் இதில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இவை உங்கள் எடையை குறைக்க உதவும் .

மீன்களில் ஒமேகா 3 உள்ளது இதனால் உங்கள்  உணவில் மீன்  சேர்த்து கொள்ளலாம்.

க்ரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் .தினமும் இரண்டு கப் க்ரீன் டீ குடிக்கலாம் க்ரீன் டீயில் சர்க்கரை எலுமிச்சை தேன் போன்ற எதுவும் சேர்க்காமல் வெறும் க்ரீன் டீ குடிப்பது நல்லது.

அரிசி சாதத்திற்கு பதிலாக கேழ்வரகு கம்பு சாமை சோளம் போன்ற சிறுதானியங்கள்  கொண்டு செய்யபடும் உணவுகளை  உங்கள்  உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

காலையில் நீரில் வேகவைத்த ஓட்ஸ் சாப்பிடலாம் இதில் நார்சத்துகள் அதிகம் உள்ளது. ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவும்.

தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது தண்ணீர் குடிப்பதால்  உடலில் உள்ள நச்சு கழுவுகள் வெளியேறும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் .

உடல் எடையை குறைக்க  தவிர்க்க வேண்டிய உணவுகள்

உங்கள் உடல் எடை குறைய நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கார்போஹைட்ரட் அதிகம் உள்ள சாதம் போன்ற உணவுகளை குறைப்பது நல்லது . உருளைக்கிழங்கு சிப்ஸ் ,சாக்லேட் ,

பர்கர், ஐஸ்கிரீம்  மற்றும் எண்ணையில் வறுத்த எந்த உணவையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவைகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் உங்கள் எடை அதிகரிக்கும்.

கொழுப்பு அதிகம் உள்ள பாலை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் கொழுப்பில்லாத பால் குடிக்கலாம்.

பிரியாணி போன்ற அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.

பாஸ்ட் புட்  எனப்படும் துரித உணவுகளை  முற்றிலும்  தவிர்க்க வேண்டும்.

ஐஸ் கிரீமில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை  உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கும் அதனால் அதனை தவிர்க்க வேண்டும் .