எடை குறைய உதவும் இரவு நேர உணவுகள்

 
memory loss


பலர் பல டயட் பின்பற்றியும் உடல் எடை குறைக்கமுடியாமல் அவதி படுவதை நாம் காண்கிறோம் .இதற்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் அவர்கள் சாப்பிடும் எண்ணெய் மற்றும் கொழுப்பு நிரைந்த உணவுகளே காரணம் .அதனால் பகலில் எப்படி சாப்பிட்டாலும் இரவில் பின் வரும் டயட்டை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் எடையில் கணிசமான அளவை குறுகிய காலத்தில் குறைக்கலாம் .அவை என்னவென்று பார்க்கலாம் 

banana


1.வாழைப்பழம் 

பலர் இரவில் உணவை முடித்து விட்டு வாழைப்பழம் சாப்பிடுவர் .ஆனால் இரவில் உணவு எடுத்துக்கொள்ளாமல் வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட வெயிட் குறையும் 
ஓட்ஸ் உணவு
 
வெயிட் குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். இரவில் வெறும் அரை கப் ஓட்ஸ் உணவு மட்டும் சாப்பிட்டால் வெய்ட் குறைக்க போதுமானது.

தானிய உணவுகள் 
வெறும் தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள் .இதன் மூலம்   உங்கள் உடல் எடை வெகுவாக குறைந்திருப்பதை  கண்டு சந்தோஷப்படலாம் .
 
முட்டை 
இரவு நேரத்தில்  முட்டையின் வெள்ளை கரு மட்டும் சாப்பிட்டால் ,வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது அதனால் எடை குறையும் 

 
இரவு ஓர் டம்ளர் பால் மட்டும் குடித்து வருபவர்களின் எடையில் மாற்றம் காணலாம் 
நொறுக்கு தீனிகள் 
உடல் எடை அதிகமானவர்கள் , அறவே மறக்க வேண்டிய உணவுகள் என்றால் அது நொறுக்கு தீனிகள் தான். இதனால் தான் பலரின் எடை கூடுகிறது 


மது 

, இரவு நேரத்தில் மது அருந்துவதை எடை குறைக்க நினைப்பவர்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.


காபி 

பலர் இரவில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் .எடை குறைக்க வேண்டுமென்றால் இரவில் காபி குடிப்பதை நிறுத்தினால் போதும் .