தண்ணீரை இப்படி குடித்தால் அது எடையையும் குறைக்கும் ,நோயையும் விரட்டும்

 
water day

 

உலகில் வாழக் கூடிய உயிரினங்கள் உயிர் வாழ அவசியம் தேவைப்படுவது தன்ணீர்.அதனால்தான் வள்ளுவர் கூட நீரின்றி அமையாது உலகு என்று கூறினார் 
நமது உடல் சரியாக,முறையாக  இயங்குவதற்கு தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. நீர் ஒட்டுமொத்த செயல்பாட்டை எவ்வாறு ஒழுங்குப்படுத்துகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
நாம் அன்றாடம் குடிக்கும் குடிநீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது அதுவும் வெதுவெதுப்பான நீர் தேவைக்கதிகமாக இருக்கும்  கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது 

water
தண்ணீருக்கு எடை குறைக்கும் குணம் கிடையாது. அதனால் அளவுக்கதிகமாக தண்ணீர் குடித்தால் எடை குறையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை .எடை இழப்புக்கு உதவும் கலவைகளைக் கொண்ட பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் நீர் சேர்ந்தால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது .

காபி, டீ போன்ற காஃபினேட்டட் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை  தண்ணீருக்குப் பதிலாக குடிக்கும்போது , அது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒரு நபரின் எடையைக் குறைக்கிறது; ஆனால் காஃபினேட்டட் பானங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிரார்கள் 

சிலர் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள் .அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது முற்றிலும் தவறானது. எதையும் அதிகமாகச் செய்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உங்கள் உடலால் பயன்படுத்தப்படும் தண்ணீரை விட அதிகமாக நீங்கள் குடித்தால், நீர் நச்சுத்தன்மை எனப்படும் ஒரு நிலையில் நீங்கள் பாதிக்கப்பட்டு இது ஆபத்தை உண்டு பண்ணலாம் 
இதனால் உடலில் சோடியம் குறைபாடு ஏற்பட்டு .சிலநேரம் உயிரிழப்பை கூட உண்டாக்கலாம்