நம் உடலில் எந்தெந்த நோய்கள் சேராமல், நீராகாரம் காக்கும் தெரியுமா ?

 
neeragaram

கொழுப்புகள் நிறைந்த பாஸ்ட் புட் சாப்பிடும் இந்த நவீன உலகில் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துக்கு பயன் படுத்திய உணவுதான் நீராகாரம் .இதன் அருமைகளையும் ,பெருமைகளையும் சொல்லும் பதிவுதான் இது .

தொன்மை பழகு: நீராகாரம் என்கிற ...

ஆரோக்கியமான கம்மங்கூழ் தொடங்கி நீர்மோர் வரை அனைத்துமே நீராகார வகையைச் சேர்ந்தவையே. திட உணவுக்கு மாற்றாக நீராகாரத்தை காலை உணவாக உட்கொண்டால் உடலுக்கு ப்ரோபயாடிக் சத்து கிடைப்பது மட்டுமல்லாமல் குடல் செரிமானமும் எளிதாக நடைபெறுகிறது .

பண்டைய காலத்தில் நீராகாரம் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களது உணவாகத் திகழ்ந்தது. வயல் வெளியில் விவசாய பணிகளில் ஈடுபடுவோர் முதல் கடுமையாக உழைக்கும் வர்க்கத்தினரின் உணவுதான் இந்த நீராகாரம் .ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெருநகரங்களில் கணினி முன் அமர்ந்து பணி செய்யும் ஊழியர்களும் இதை சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் ஐயமில்லை .

அரிசி மாவில் தயாரிக்கப்படும் இட்லி தோசை சோறு போன்ற உணவால்  பகலில் பணிச் சோர்வு, தூக்கம் ஏற்படும். ஆனால் நீராகாரம் உடற்தசைகளுக்கு வெகுவிரைவில் சத்துக்களை கொண்டு சேர்ப்பதுடன் கொழுப்பு, கொலஸ்ட்ரால் சேராமல், மலசிக்கல் வராமல் உடலைப் பாதுகாக்கிறது.

இந்த காலத்தில் வளரும் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பூரி பொங்கல் வடை என்று சாப்பிடுகின்றனர் .ஆனால் அந்த அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள நீராகாரங்களைத் தயாரிப்பதும் சாப்பிடுவதும் , சீரணிப்பதும் சுலபம். இவற்றுடன் மோர் மிளகாய், மாங்காய் கீற்று, அப்பளம், சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிட்டால் நீராகாரத்தின் சுவை மேலும் பன்மடங்கு அதிகரிக்கும்.