வாக்கிங் போவோரே !இனி இப்படி போய் பாருங்க அதன் பலன் தெரியும்

 
walking

பொதுவாக வாக்கிங் போவது உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் .அதனால்தான் டாக்டர்கள் எல்லோரையும் தினமும் நாலு கிலோமீட்டர் அளவுக்கு நடக்க சொல்கின்றனர் .தினம் 40 நிமிடம் பூங்காவிலோ அல்லது பீச்சிலோ நடக்கும்போது நாம் ஏராளமான நன்மைகள் அடையலாம் .

வெறும் கால்களால் நடக்கும் போது நமக்கு உண்டாகும் பத்து நன்மைகள் பற்றி பார்க்கலாம்

walking

1.தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.

2. மூட்டு வலி குறையும்.

 3.இரத்த அழுத்த அளவு சீராகிறது.

 4.நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

 5.கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

6.அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான உடல் பருமனைக் குறைக்கின்றது.

7.மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.

8.பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

9.பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

10. இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.