சாப்பிட்ட பின் இதை செஞ்சா எவ்ளோ நன்மை தெரியுமா ?

 
walking

ஒரு மனிதனுக்கு நடை பயிற்சி என்பது பலவிதமான ஆரோக்கியத்தை அள்ளி தரும் .அந்த நடை பயிற்சியினை எந்த நேரத்தில் எப்படி போனால் எந்த விதமான ஆரோக்கிய பலனை அடையலாம் என்று இந்த பதிவு உங்களுக்கு எடுத்து கூறுகிறது

walking

நன்மைகள்

இரவு உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்தி ,நீங்கள் உண்ட

உணவு விரைவாக ஜீரணமாக வழி வகை செய்கிறது .

நைட் உணவுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் உடல் எடை குறைகிறது.

நைட் உணவு சாப்பிட்ட பிறகு நடப்பதால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் உங்களுக்கு முழு ஆரோக்கியத்தை கொடுக்கிறது

டின்னருக்கு பிறகு நடப்பது வளர்சிதை மாற்றமும் பலப்படுத்தப்படுகிறது.

உணவைச் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் ,

இது நல்ல இரவு ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.

நைட் உணவு உட்கொண்ட பிறகு தினமும் நடப்பதால், தசைகள் சரியாக வேலை செய்யும்.

இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

நைட் சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சுகர் அளவு அதிகமாகாமல் காப்பதால் ,சுகர் பேஷண்டுகள் டின்னருக்கு பிறகு நடக்க அறிவுறுத்தப்படுகின்றனர்