எதுக்கெடுத்தலாம் வைட்டமின் மாத்திரை சாப்பிடாமல் இந்த இயற்கை உணவு மூலம் வைட்டமின் கிடைக்கும்

 
tablet

பொதுவாகவே, உடலை எப்போதும் `ஸ்லிம்' ஆக வைத்திருக்க நினைப்பவர்கள் காலையில் கண் விழித்தது முதல், இரவு கண்ணுறங்கும் வரை சில பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கண் விழித்ததும் காபி, டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். அவற்றுக்குப் பதிலாக, இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடித்து வந்தால் அது செரிமானத்துக்கு உடனடி ஊக்கமூட்டியாக அமையும். மேலும் பித்தநீரை தயாரிக்கும் கல்லீரலைத் தூண்டுவதோடு தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். இதன் மூலம் இலகுவான முறையில் மலம் வெளியேறும்.

வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும்

இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!

இயற்கை உணவு:

நம்முடைய உடலில் வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் நாம் அதற்காக கடைகளில் விற்கும் மருந்துகளை சாப்பிடுவது மிகவும் தவறு. நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது.

நாம் சாப்பிடும் கீரைகளில் ஒன்றான இந்த பசலை கீரையில் வைட்டமின் ஈ சத்து மிகுந்த அளவு உள்ளது. மேலும் இதுல உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம்முடைய உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் இதனை டயட்டில் எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வேர்க்கடலை:

நம்மில் பலருக்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். இதிலும் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. தினமும் சிறிது வேர்க்கடலை சாப்பிடுவதால் நமக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.கால் கப் வேர் கடலையில் 20% வைட்டமின் ஈ சத்து உள்ளது.

உலர் மூலிகை:

வைட்டமின் ஈ சத்துக்கள் இந்த உலர் மூலிகையில் அதிக அளவு உள்ளது. எனவே சாலட், சூப், போன்றவை குடிக்கும் பொது நாம் இந்த உலர் மூலிகையை சேர்த்து கொள்வதல்ல நமக்கு சுவையாகவும் இருக்கும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்களும் கிடைக்கும்.

காலே கீரை:

பசலை கீரையில் இருப்பது போலவே இந்த காலே கீரையும் நமக்கு வைட்டமின் ஈ சத்துக்களை தருகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை நாம் இந்த காலே கீரையையும், பசலை கீரையையும் எடுத்து கொள்வது நம் உடலுக்கு நல்லது.

பாதாம்:

நாம்  சாப்பிடும் ஸ்னாக்ஸ் உணவுகளில் ஒன்றான இந்த பாதாமில் அதிக அளவு வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. எனவே தினமும் நாம் இந்த பாதாம் சாப்பிடுவதால் நமக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடக்கின்றன.

கடுகு கீரை:

நம்மில் பலருக்கும் இந்த கீரையை பற்றி தெரியாது. இந்த கடுகு கீரையில் அதிக அளவு வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளது. இதனை பச்சையாகவோ அல்லது பாதி வேக வைத்தோ சாப்பிடுவதால் நமக்கு முழுமையான வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன.

ஆலிவ் ஊறுகாய்:

நாம் சாப்பிடும் போது ஊறுகாய் தொட்டு கொள்வது வழக்கம். ஏதோ ஒரு ஊறுகாய் சாப்பிடுவதற்கு பதிலாக ஆலிவ் ஊறுகாய் சாப்பிடுவதால் நமக்கு வைட்டமின் சத்துக்கள் கிடக்கி வாய்ப்புள்ளது. அதிலும் முக்கியமாக்க இதுல வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே நாம் சாப்பிடும் பொது ஆலிவ் ஊறுகாய் சாப்பிடுவதால் நமக்கு 6% வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கின்றன.