பல நோய்களை குணப்படுத்தும் பழங்களின் அரசி எதுன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க

 
health health

வில்வ பழம் ஜூஸ் பல விதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது .அதனால்தானோ என்னவோ விநாயகர் சதுர்த்திக்கு கூட வில்வ பழம் வைத்து பூஜை செய்யப்படுகிறது 

வில்வ பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.இது நம் உடலில் உண்டாகும் பித்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ள பழம் என்று கூறினால் அது மிகையாகாது .

வில்வ பழம் மருத்துவ பயன்கள் ...


இவ்வளவு சக்தியுள்ள வில்வ பழத்தினை  .பழங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது 
வில்வ பழத்தில் பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கிறது.
இந்த வில்வ ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால்  இது நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு கொடுத்து நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் .
இதில் ஆண்டி- இன்ஃபெளமெட்ரீ பவர் இருப்பதால் ,இது மனித  உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் வல்லமை படைத்தது .
இந்த வில்வ பழம் மற்றும் இலைகள் மனிதனின்  கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுக்காக்கிறது. இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ,அதை  சுத்திகரிக்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்யும் திறன் கொண்டதால் சித்த மருத்துவத்தில் இதற்கு தனியிடமுண்டு ..