அஞ்சறைப்பெட்டியில் இந்த பொருள் இருந்தாலே மாத்திரை பெட்டி தேவைப்படாது

 
vendhayam

நம் சமையலறையின் அஞ்சறை பெட்டிக்குள் இருக்கும் பல பொருட்களை முறையாக பயன்படுத்தினால் குடும்பத்தில் உள்ளோருக்கு மருந்து மாத்திரையே தேவை படாது .அந்தளவுக்கு அந்த அஞ்சறைப்பெட்டியில் உள்ள மளிகை பொருட்களில் ஆரோக்கியம் கொட்டி கிடக்கிறது ,அவற்றுள்  வெந்தயம் நம் உடலுக்கு கொடுக்கும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம் 

tablet

மனிதனின் இரத்த குழாய்களினுள் உண்ணும் உணவுகளாலும் ,உடல் நல கோளாறினாலும் கொழுப்புக்கள் படிந்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை நாளடைவில் சந்திக்க நேரிடுகிறது.இதற்கு வெந்தயம் சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் .இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது.
 
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் .அந்த  ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும். மேலும் அந்த ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது சுகர் அளவு உயராமல் சுகர் பேஷண்டுகளுக்கு நன்மை புரியும் 

வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தை தணித்து ,பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது 
அதாஉ மட்டுமல்லாமல் வெந்தயத்திற்கு மலச்சிக்கலை தீர்க்கும் பவர் உண்டு . மேலும் பலருக்கு உடல் சூட்டினாலும்  முடி கொத்து கொத்தாக கொட்டும் பிரச்சனை இருக்கும். எனவே வெந்தயத்தில் எண்ணெய்  பசை இருப்பதால் .அந்த பசை முடியுதிர்வை தடுத்து ,முடி வளர்ச்சிக்கு உதவிடும் 
நாள் பட்ட அல்சர் என்ற வயிற்று புண்ணால் அவதியுறுவோர் ஒருபிடி வெந்தயத்தை ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அந்த  பிரச்சனை தீர்ந்து நிம்மதியாகயிருக்கலாம்