இதை இரவில் ஊர வச்சி ,சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் அண்டாமல் வாழ வச்சி காக்கும் தெரியுமா

 
vendhayam

வெந்தயத்தின் இலை முதல் விதை வரை பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. மற்றும் இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.

வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.
முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும்.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும். ஓரிரு நாள்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

cdn.britannica.com/05/118605-004-4D6BF054/Seeds...

1.வெந்தயத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

வெந்தயத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, இரும்புசத்து, வைட்டமின் பி-6, மெக்னீசியம், நார்சத்து. புரதம், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் வெந்தயத்தில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.

2. மின்னும் சருமம்

வெந்தயத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது. வெந்தயத்தினை நீரில் ஊறவைத்து பின்பு அதை அரைத்து உங்கள் முகத்திற்கு பூசவேண்டும். பின்பு ஒரு 30 நிமிடம் கழித்து உங்கள் முகத்தினை நீங்கள் கழுவி வந்தால் உங்களின் சருமம் பொலிவுடன் காணப்படும்.

3. உடலிற்கு குளிர்ச்சியளிக்கும்

வெந்தயத்திற்கு உங்கள் உடலினை குளிரவைக்கும் சக்தி உண்டு. உடல் உஷ்ணம் பிரச்சினை அதிகம் உள்ளவர்கள் சிறிது அளவு வெந்தயத்தினை தினமும் காலை நீரில் ஊறவைத்து வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் குளிர்ச்சியடையும். எனவே உடல் சூடு பிரச்சினை உள்ளவர்கள் வெந்தயத்தினை எடுத்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

4. இரத்த சோகை நோயினை தடுக்கும்

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் வரும் நோயே இரத்த சோகை ஆகும். வெந்தயத்தில் அதிக அளவு இரும்புசத்து உள்ளது. தினமும் சிறிதளவு வெந்தயத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை னாய் வராமல் தடுக்கும். முக்கியமாக பெண்கள் தவறாமல் வெந்தயத்தினை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

5. சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும்

வெந்தயம் அதிகம் உண்டால் உங்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே தினமும் சிறிதளவு வெந்தயத்தினை உணவில் சேர்த்து வாருங்கள் உறவுகளே.

6. முடி கொட்டுதலை தடுக்கும்

வெந்தயத்தினை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வு தடுக்கப்படும் எனும் உண்மை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதை தவிர வெந்தயத்தினை அரைத்து தலை முடிக்கு தடவி ஒரு 30 நிமிடம் கழித்து சிகைக்காய் தேய்த்து குளித்து வந்தால் உங்களின் முடி ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உங்களுக்கு முடி கொட்டுதல் முற்றிலுமாக தடுக்கப்படும்.

7. உடலில் உள்ள கேட்ட கொழுப்பினை குறைக்கும்

வெந்தயத்திற்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி உண்டு. தினமும் சிறிதளவு வெந்தயத்தினை எடுத்துக்கொண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உங்கள் உடல் அழகுபெறும்.

8.தாய்ப்பால் சுரக்க உதவும்

கருவுற்ற தாய்மார்கள் வெந்தயத்தினை சிறிதளவு உண்டு வந்தால் அவர்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். எனவே தாய்ப்பால் அதிகம் சுரக்க விரும்பும் தாய்மார்கள் வெந்தயத்தினை உண்டு வரவும்.

9. வயதான தோற்றம் வராமல் தடுக்கும்

வெந்தயத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களுக்கு பிரீ ராடிகளால் வரும் செல் அழிவு முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது. எனவே வெந்தயத்தினை அடிக்கடி சேர்த்து வாருங்கள் உறவுகளே.

இவ்வளவு நன்மைகள் அடங்கிய வெந்தயத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள் நண்பர்களே. மேலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த தினமும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்குங்கள்