வெந்தய டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாகவே வெந்தயம் பல ஆரோக்கிய நன்மைகளை நம் உடலுக்கு அள்ளி தரும் ,குறிப்பாக சர்க்கரை நோய் முதல் உடல் உஷ்ணம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த வெந்தயம் கை கண்ட மருந்து .இதை தேநீராக தயாரித்து குடித்தல் நல்ல பலன் கிடைக்கும்
வெந்தய டீ தயாரிக்கும் முறை : ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள்.இதற்கு இந்த தேனீர் சிறந்த பலன் தரும் .

.
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறைந்து அதை உயராமல் கட்டுக்குள் கொண்டு வரலாம் .
தினம் அதிகமான டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த வெந்தய டீ ஒரு மாற்றாக இருக்கும். அதாவது, வெந்தய டீ குடிப்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். வயிற்றில் இருந்து கெட்ட பாக்டீரியா, மற்றும் பூச்சி பிரச்சனைகள் நீங்கும். வாய் துர்நாற்றம் வீசுதல், மற்றும் வயிறு புண், அசிடிட்டி பிரச்சனை சரியாகும்.இவ்ளளவு நன்மைகள் தரும் வெந்தய டீயை குடிக்க நாமும் தயாராவோம் வாருங்கள் நண்பர்களே !


