வெந்தய கீரையால் இத்தனை நோய்கள் குணமாகும்னு எவ்ளோ வேணும்னாலும் பந்தயம் கட்டலாம்
வெந்தயத்தை போன்றே அதன் இலைகளாகிய வெந்தய கீரைகளிலும் ஏராளமான ஊட்ட சத்துக்கள், ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன.
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது :
வெந்தயக் கீரைகள் உணவுக்கு பிறகு சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது. மேலும் இரத்த சர்க்கரைக்கு எதிரான இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க :

வெந்தயக் கீரை கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.
இதயத்திற்கு நல்லது :
வெந்தய கீரை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து வதாக அறியப்படுகிறது. வெந்தய கீரை கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைக்கின்றன. இது பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
செரிமான அமைப்புக்கு நல்லது :
வெந்தய கீரைகளில் உள்ள கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலின் அபாயத்தைக் குறைத்து சீரான மற்றும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வாய்வு மற்றும் அஜீரண சிகிச்சையில் பயன்படுகிறது.
வாய் புண்களை குணமாக்குகிறது :
வெந்தய கீரைகள் வாய் புண்களை குணப்படுத்த உதவுகின்றன. ஒரு கப் வெந்தய கீரைகளை 2 கப் தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, வாய் கொப்பளிக்க வாய்ப்புன் குணமாகும்.
இரத்த சோகை :
வெந்தய கீரையில் ஃபோலேட் உள்ளது. இது எலும்பு மஜ்ஜையில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளை யனுக்களின் விரைவான வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு அவசியமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் களான பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜ னேற்றிகளால் செறிவூட்டப் பட்டிருப்பதால், நோய்களுக்கு எதிராக போராட உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியம் :
வெந்தயக் கீரையில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது எலும்பு வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமாகும்.
ஒரு கப் நறுக்கிய வெந்தய கீரையில் 110 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட (RDA) கால்சியம் அளவில் 18.4 சதவீதம் ஆகும். கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு கனிமமாகும்.


