இந்த காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது.

 
sugar

பொதுவாக நமக்கு காய் கறிகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது .ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியுள்ளது அந்தவகையில் புடலங்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.புடலங்காயில் புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம் மற்றும் விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. 
2.சிலருக்கு சுகர் அளவு அதிகமாயிருக்கும் .புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. 
3.சிலருக்கு வயிற்றில் பூச்சிகள் இருக்கும் .வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற புடலங்காய் வல்லது.
4.சிலருக்கு விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் ., அப்போது புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் குணமாகும் 
5.புடலங்காய் சாப்பிடுவது இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது.
6.அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
7.இப்படி இதயம் பலவீனத்துக்கு  ஆளானோர், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
8.காலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாக பிழிந்து,எடுத்து கொள்ளவும் 
 9.அந்த சாறை வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டு வரவும் 
10.இப்படி சாப்பிட்டால் இதயம் சமநிலை பெறும்; இதயமும் பலம் பெறும்