ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த காய்க்கு உண்டு
பொதுவாக முட்டை கோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட்டால் நம் உடலுக்கு ஏராளமான நன்மை கிடைக்கும் .அப்படியில்லையென்றால் அரை வேக்காடாக கூட சமைத்து சாப்பிடலாம் .மேலும் இதன் நன்மைகளை நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வாரம் மூன்று முறையாவது முட்டை கோஸ் சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
2.முட்டை கோஸில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
3.முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.
4.முட்டைகோஸில் நார்சத்து உள்ளதால் மல சிக்கல் வராமல் தடுக்கும்
5.முட்டைகோஸில் அல்சரை குணமாக்கும் பொருள் உள்ளதால் இதை ஜூஸ் போட்டு குடிக்கலாம்
6.வயதானால் வரும் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் முட்டைகோஸுக்கு உண்டு
7.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும் ஆற்றல் முட்டை கோசுக்கு உண்டு
8.உடலில் அழற்சி வராமல் பாதுகாக்கும் ஆற்றல் முட்டைகோஸுக்கு உண்டு