தொடர்ந்து 21 நாள் வெந்தய கீரை சாப்பிட்டால் எந்த நோய் சரியாகும் தெரியுமா ?

 
vendhaya keerai vendhaya keerai

வெந்தயத்தை போலவே வெந்தய கீரையும் நிறைய ஆரோக்கிய தன்மையை தன்னிடம் அடக்கி வைத்துள்ளது .மேலும் இந்த கீரை பாலூட்டும் தாய் மார்கள் சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாக இருக்கும் .மேலும் இந்த கீரையில் இரும்பு சத்து ,நமக்கு ரத்த சோகை வராமல் தடுக்கும் .மேலும் இந்த கீரையை துண்டாக்கி ஒரு பாத்திரத்தில் காய்ச்சி குடித்து வந்தால் நெஞ்சு வலி ,உடல் சூடு போன்றவை குணமாகும்

வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ...

வெந்தயம் 20 கிராம், வெங்காயம் 10 கிராம், ஏலரிசி 2 கிராம், மணத்தக்காளி இலை ஒரு கைப்பிடியளவு இவைகளை சேகரித்துக் கொள்ளவும் .பின்னர்  ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, மணத்தக்காளி இலையைப் போட்டு வதக்கி, இடித்துக் கொண்டு பிறகு வெந்தயம், ஏலரிசி இவைகளைப் போட்டுச் சிவக்க வறுத்து கொள்ளவும் ,

பின்னர் அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு அது சிவந்து வரும் சமயம் மணத்தக்காளி இலையை அதில் போட்டு, எல்லாவற்றையும் மறுபடிக் கிளறி இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, பகல், ஆக மூன்று வேளைக்கு, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் மூன்றே நாள் சாப்பிட்டால் போதும் தீராத இருமல் கூட குணமாகி நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

மேலும் சிலருக்கு  வாயில் துர்நாற்றம் இருந்து யாருடனும் பேசவே அச்சப்படுவார்கள் .இப்படி உள்ளவர்கள் தொடர்ந்து 21-நாள் இந்த வெந்தய கீரையை சாப்பிட்டு வந்தால் வாய் நாற்றம் விலகிவிடும்.