நம்மை எந்தெந்த நோயிலிருந்து வாழைக்காய் வாழ வைக்கும் தெரியுமா

 
valakkai

?

காய் கறிகளில் எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு வாழைக்காய்க்கு உண்டு .இது நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து ,நமக்கு அரணாக விளங்குகிறது .அதனால் இந்த பதிவில் வாழைக்காய் கொடுக்கும் நல் விஷயங்கள் பற்றி பார்க்கலாம் .

வாழைக்காய் புட்டு

உடலில் உள்ள  ஜிரண உறுப்பிற்கு நல்ல சத்துக்களைக் கொடுக்கிறது வாழைக்காய்.

அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் இதை  உணவில் வாழைக்காயைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைக்காயில் விட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது நமது எலும்புகளுக்கு வலிமையைக் கொடுத்து மூட்டுவலி மற்றும் இதர பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

வாழைக்காயை நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் மிக ஆபத்தான ,கொடுமையான பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் மலசிக்கல் பிரச்சினை ஒரு நாள் கூட வராமல் இந்த காய் நம்மை பாதுகாத்து பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது

பல்வேறு சத்துக்கள் கொண்ட வாழைக்காய் மனிதனின் இதயம் மற்றும் நரம்பு ஆகியவற்றிற்கு அதிக அளவு நல்லது செய்யும் .ஆனால் இதை வாய்வு என்று பலர் ஒதுக்கி விடுவது உண்டு .இனியாவது இதன் சிறப்புகள் தெரிந்து இதை ஒதுக்காமல் சாப்பிடுங்கள்