கிட்னியை காலம் முழுவதும் ஆரோக்யமாக வாழ வைக்கும் வாழை தண்டின் அருமை பெருமை

 
kidney

வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். சிறுநீரகக்கோளாறுகளுக்கு பரவலாகப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவு. அது மட்டும் அல்ல... இன்னும் எண்ணற்றப் பலன்களை வாரிக் கொடுக்கக்கூடியது வாழைத்தண்டு சாறு

வாழைத்தண்டு சாறினையோ அல்லது பொரியலாகவோ கூட்டாகவோ உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் எடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால், உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும் அல்லது சிறுநீரின் வழியே வெளியேறிவிடும் என்பது நமக்குத் தெரியும். சிலர் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்வார்கள். அப்படி குடிக்கும் வாழைத்தண்டு ஜூஸில் இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.

சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு!

வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

 

ஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும்.

வாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள சுவர்ப்பு சுவை தான் சர்கு்கரை நோய்க்கான இயற்கை மருந்துாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்!
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.

ரத்தசோகையை குணப்படுத்தும்!
வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.