கிட்னியை நூறாண்டு காலம் ஆரோக்கியமாய் வாழவைக்கும் வாழை தண்டுவின் மற்ற சிறப்புக்கள்

 
vazhai thandu

வாழை மரத்தின்  பிரமிக்க வைக்கும்  சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின்  பாகங்களான பூ முதல்  தண்டு, பகுதிவரை  அனைத்து பாகங்களும்  மருத்துவகுணமுடையது என்றால் அது மிகையாகாது .எனவே, இந்த  பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் .

வாழை மரத்திலிருந்து கிடைக்கும்  வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் A, விட்டமின் C போன்ற சத்துகள் இருப்பதால், வாழைத்தண்டை ஜூஸ் செய்தும் மற்றும் பொரியலாக சமைத்தும்  சாப்பிடலாம்.

வாழைத் தண்டை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! - Simplicity

இன்றைய தலை முறையி னர்  அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு மற்றும்  வறட்சியான உணவாகவும் சாப்பிடுகின்றனர் . மேலும் அவர்கள்  ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே அதிக அளவில் உட்கொள்கின்றனர்.

வாழைத்தண்டு மருத்துவ பயன்கள்

போதை பொருள் மற்றும் , புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டதால்  சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி பெரும் வேதனையை கொடுக்கின்றன 

அதேபோல யூரின் வரும் நேரத்தில் அந்த யூரினை  வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதனை சரி செய்வதர்க்கான ஓர் சிறந்த மருந்தாக வாழைத்தண்டு பயன்படுகிறது. மேலும் மருத்துவ உலகில் வாழை தண்டு  மிக முக்கிய ஒன்றாக திகழ்கிறது.

வாழைத்தண்டின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்...

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது..

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது  அருந்தும் பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம்,அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.  வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை அதிகம் உண்டு.இவ்ளோ சிறப்பு குணங்கள் கொண்ட வாழை தண்டை மலிவான விலையில் மார்க்கட்டில் வாங்கி அதை சமைத்து நம் கிட்னியை பாதுகாத்து கொள்ளவேண்டும்