அல்சரை அடிச்சி விரட்ட உதவும் அற்புத வழிகள்

 
ulcer health tips


. மனிதனின்  இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான் அவர்  உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து நமது செரிமானத்துக்கு உதவுகிறது.இந்த அமிலங்கள் தான் அல்சர் உண்டாக காரணம் .ஏனெனில் சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் போனால் இந்த ஆசிட் நம் இரைப்பையில் புண்ணை உண்டாக்குகிறது 

ulcer

அல்சர் வர காரணங்கள்:
அடிக்கடி ஹொட்டல் உணவை விரும்பி சாப்பிடுவோருக்கும் .குறிப்பாக   மசாலா, காரம் நிறைந்த உணவை சாப்பிடுவோருக்கும் , மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், மற்றும் புகை பிடித்தல், போன்ற பழக்கத்தினாலும்  கணையத்தில் ஏற்படும் கட்டினாலும் ,அதிக மன அழுத்தத்தினாலும் இந்த அல்சர் ஆனது உருவாகி மனிதனை படுத்தி எடுக்கிறது 


அல்சரின் அறிகுறிகள்:
அல்சர் உள்ளோரின் வயிற்றின் மேல் பகுதியில் வலி உண்டாவது இதன் முக்கிய அறிகுறி ., அடுத்து உணவு சாப்பிட்ட ஓரிரு மணி துளிகளில் பசி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது .மேலும் அல்சர்  நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் வருவதும் முக்கிய அறிகுறி .அடுத்து இன்னும் சில அறிகுறிகள் :1.நெஞ்சு வலி, 
2.ரத்த வாந்தி, 
3.உடல் பருமன், 
4.சோர்வு, போன்றவையும் அறிகுறிகளாகும்
 
இந்த பாடாய் படுத்தும் அல்சருக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உண்டு அவை :
1.சிறிது அளவு சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து வைத்து கொள்ளவும் .பின்னர் அதில்  சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து தினமும் பருகி வர அல்சர் ஓடி விடும் .

2.அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் தினமும் அருந்தி வர அல்சர் இருக்குமிடம் தெரியாமல் போகும் 
 
3.ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து வைத்து கொள்ளுங்கள் .பின்னர் அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை சாப்பிட்டு வருவோரின் குடலில் அல்சர் உருத்தெரியாமல் போகும் .