இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினா அல்சரால் அவஸ்த்தை பட வேண்டி வரும்

 
ulcer ulcer

அல்சர் என்றால் என்ன?' 'தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.

ulcer health tips

அல்சர் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி அடி வயிற்றுப் பகுதியில் ஏற்பட கூடிய கடுமையான வலி தான், வயிற்றில் எரிவது போன்ற மிகக் கடுமையான தீவிரமான வலி ஏற்படும்.

இந்த வலியானது வயிற்றில் புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் உண்டாகும், உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது வலியானது இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.

 

இப்போது இதனை தொடர்ந்து அல்சர் வருவதற்கான அறிகுறிகள் என்ன உள்ளது, என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.

அல்சர் நோய்க்கான அறிகுறி 1

அல்சர் புண்களில் பொதுவான அறிகுறி எதுவென்றால் அடி வயிற்று பகுதியில் அதிகமான வலி ஏற்படும், செரிமான மண்டலத்தின் மேல் பகுதியில்.

எந்த இடத்தில் வேண்டுமானாலும் வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இந்த வயிற்று வலியானது நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளாத நேரத்தில் குறிப்பாக ஏற்படும்.

அல்சர்  அறிகுறி 2

அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களுக்கு அறிகுறியாக இருப்பது முதலில் குமட்டல்.

இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் உணவில் அலட்சியம் செய்யாமல் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து தப்பிவிடலாம்.

 

வயிற்றுப்புண்களில் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான மாற்றங்கள் சில நேரங்களில் வாந்தி எடுப்பது போன்றவற்றை ஏற்படுத்தும் இதுபோன்ற நிலை வந்தால்.

ஆஸ்பிரின் என்று சொல்லக்கூடிய மருந்தினை எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் இந்த வலி  மருந்தானது அதிகமாக வயிற்று புண்களை ஏற்படுத்தும்.

இரைப்பை குழாயில் இருந்து இரத்தம் கசிதல் என்பது பல வகையான உடல் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இந்த ரத்தக் கசிதல்யானது மேல் வயிற்று வலியுடன் சேர்ந்து ஏற்பட்டால் அது வயிற்றுப் புண்களுக்கான முதல் அறிகுறியாகும்.

வயிற்றில் புண்கள் இருந்தால் மார்பு சம்பந்தமான பல்வேறு வலிகளில் ஏற்படும், மேலும் இந்த அல்சர் அறிகுறியானது, மன அழுத்தம், பதட்டம், போன்றவற்றை கூட இது போன்ற நோய்களை ஏற்படும்.

அல்சர் அறிகுறியாக இருந்தால் உடல் எடையானது திடீரென்று குறையும், அதிகமாக பசி எடுக்காமல் இருப்பதை வைத்து நீங்கள் இதனை அறிந்து கொள்ளலாம்,நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் போது அசௌகரியமாக இருப்பதை உணரலாம்.

 

வயிற்றுப் பகுதியானது வீக்கமடைந்து இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் வாய்வு சம்பந்தமான பிரச்சனைகள் கூட இருக்கலாம் இது மட்டுமில்லாமல் வயிற்றுப்புண்களுக்கான ஒருசில அறிகுறியாக இது இருக்கலாம்.

அல்சர் நோயினால் வரக்கூடிய புண்கள் பசி எடுப்பதை கட்டுப்படுத்துகிறது, சிலருக்கு பசிக்கும் நேரத்தில் வயிற்றுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும்.

அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் போது கசப்பு தன்மை ஏற்படும், வலியானது உணவு உண்ட பிறகு குறைந்துவிடும்,பசி எடுக்கும் போது மட்டும் இந்த வலி ஏற்படுவதால், இதனை வைத்து அல்சர் நோயை எளிமையாக கண்டறியலாம்.