மறைந்து போன மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கத்தால் பெண்களை விரைந்து தாக்கும் நோய்கள்

 
manjal

மங்களகரமான பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மஞ்சள். அதுமட்டுமல்லாமல் இது ஒரு கிருமி நாசினி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது என்பது மிகவும் நல்ல ஒரு விஷயம். எந்தவொரு கிருமித் தொற்றும் பெண்களை அண்டக் கூடாது என்பதற்காகவும், மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த காலத்திலிருந்தே பெண்கள் இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

turmeric-face

பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை நீக்க கெமிக்கல் கலந்த க்ரீம் உள்பட பல்வேறு முறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்த முறை சரிதானா? காலங்காலமாக நமது பெண்கள் கடைபிடித்த மஞ்சள் பூசும் முறைக்கு பதிலாக இந்த கெமிக்கல் கலந்த க்ரீமை பயன்படுத்துவதால் பல தீங்குகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் மஞ்சள் பூசுவதால் வேறு என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் முறையை மீண்டும் கடைபிடித்தால் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும்.

தினந்தோறும் மஞ்சள் பூசி குளிப்பதால் உடலில் முடி தோன்றாமல் இருப்பது மட்டுமின்றி தோலில் பாதிப்பு உண்டாகாமல்பள பளவென ஜொலிக்கும் தேகத்தைப் பெறலாம்.

மேலும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் நீங்கும். மேலும் ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்.

சரி. நாளையிலிருந்து மஞ்சளை தேய்த்துக் குளிக்க ஆரம்பித்து விட்டீர்கள். எப்படி குளிப்பது? நீங்கள் மஞ்சளை, கல்லில் இழைத்து குளிப்பவர்கள் ஆக இருந்தால், முதலில் நீங்கள் பயன்படுத்தப்படும் அந்த கல்லையும், அந்த மஞ்சளையும் கழுவிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்துவிட்டு இறுதியாக மஞ்சள்தூள் ஆக இருந்தாலும், குழைத்த மஞ்சளாக இருந்தாலும் முதலில் உங்கள் உள்ளங்கைகளில் எடுத்துவிட்டு, அந்த மஞ்சளை கால் பகுதியிலிருந்து தான் மேல் பகுதிக்கு தேய்த்து வரவேண்டும். பலபேர் முதலில் முகத்தில் தேய்த்து விட்டு, அதன் பின்பு கை, கால்களில் தேத்துக் கொள்வார்கள். இப்படி செய்வது தவறு. முதலில் கால் பகுதி, கைப்பகுதி அதன் பின்புதான் கழுத்து, முகம். இதுதான் சரியான முறை. இதைப்போல் நீங்கள் தலைக்கு குளிக்கும் தினங்களில் மஞ்சளை தேய்த்த பின்பு தலைக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. அதாவது முதலில் உங்களது தலையை முழுமையாக சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் தேய்த்து பின்பு, உடம்பு பகுதியில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் தலைப் பகுதியில் தண்ணீர் ஊற்றி குளிக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.