மஞ்சள் கலந்த துளசி நீரை குடித்தால் என்னென்ன ஆரோக்கியம் கிடைக்கும் தெரியுமா ?
நாட்டு வைத்யத்தில் பொதுவாக மஞ்சள் சிறந்த மருந்தாக செயற்பட்டு வருகிறது .இதை உள்ளுக்கு சாப்பிட்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் ,வெளியில் ஸ்கின்னுக்கு போட்டால் ஸ்கின் பிரச்சினை எல்லாம் சரியாகிவிடும் .அதே போல் துளசியும் சிறந்த இம்மியூனிட்டி பவர் கொடுக்கும் .அது நம்முடைய

உடலுக்கு சுவாச பிரச்சினை முதல் சளி பிரச்சினை வரை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டது.இது இரண்டையும் சேர்த்து ஒரு மருந்து பாணம் தயாரிக்கலாம் வாங்க
ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கினால் பானம் தயாராகி விடும்
1.ஆஸ்த்மா பிரச்சினையால் அவதி படுவோர் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், சுவாசப்பாதையை சீராக்கி அது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவி செய்யும். .
2.கிட்னி பிரச்சினையில் அவதி படுவோர் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இந்த மஞ்சள் துளசி பானம் வழிவகுக்கிறது .
3.மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் ,துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து எப்போதும் புத்துணர்வுடன் இருக்கலாம் .
4.எந்த வைத்தியத்துக்கும் சரிப்பட்டு வராமல் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடித்து வந்தால் அது குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை சீர் செய்து விடும் ஆற்றல் கொண்டது .
5.சிலருக்கு சைனஸ் பிரச்சினை முற்றி தீராத தலை வலியால் அவதி படுவர் ,அவர்கள் தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்தி விடலாம்


