உடல் எடை குறைக்க ஒரு துளசி வைத்தியம்
பொதுவாக உடல் எடை அதிகரிப்பால் பலரும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் .குறிப்பாக சுகர் முதல் ரத்த அழுத்தம் ,கொலஸ்ட்ரால்,இதய நோய் போன்ற பல நோய்களுக்கு முக்கிய காரணம் உடல் பருமன் தான் .இந்த உடல் பருமனை குறைக்க இந்த பதிவில் ஒரு தீர்வை கொடுத்துள்ளோம்
1.துளசியில் நிறைய ஆரோக்கிய குணம் அடங்கியுள்ளது என நம் அனைவருக்கும் தெரியும்.
2.மனித உடலில் நிறைய நச்சுக்கள் சேரும் .அப்படி உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது துளசி.
3.அது போல் தேன் இயற்கையாக கிடைக்கும் ஒரு அருமருந்து. இது நம் உடலை தெம்பாக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும்
4.அப்படி மிகவும் அற்புத சக்தி வாய்ந்த தேன், எலுமிச்சை சாறு மற்றும் துளசி சேர்த்து அருந்தும் பொழுது ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
5.பலரும் தற்பொழுது இருக்கும் ஒரு பிரச்சினை எதுவென்றால் உடல் எடை அதிகரிப்பு .உடல் எடையால் அவதிப்பட்டு வரும்போது குறைப்பதற்கான வழியை தேடி வருகின்றனர்
6.அப்படி உங்களுக்கு உடல் எடையை குறைக்க முதலில் துளசி இலையின் சாறு கொஞ்சம் எடுத்து கொள்ளவும்
7.அதனுடன் எலுமிச்சம் பழம் சாறு கொஞ்சம் சேர்த்து சூடாக்கி கொள்ளவும்
8.அந்த கலவையுடன் தேன் கலந்து உணவு உண்டு முடித்த பின்னர் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை வேகமாக குறையும்


