உடல் எடையை பணம் செலவில்லாமல் குறைக்க உதவும் வழிகள்
பொதுவாக இன்று அதிக உடலுழைப்பு இல்லாமல் போனதால் பலர் உடலில் சதை போடுகின்றனர் ,உண்ணும் உணவுக்கேற்ற உடலுழைப்பு இருந்தால் எடை கூடாது .
பின் வரும் இந்த பானங்கள் தேவையான ஊட்டச்சத்தை பெறவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடை குறைக்கவும் உதவும்.
1.முதலில் ஒரு கிண்ணத்தில் கொத்தமல்லி விதை - இரண்டு தேக்கரண்டி எடுத்து கொள்ளவும்
2.அடுத்து லவங்கம்பட்டை பொடி - ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளவும்
3.அடுத்து தண்ணீர் மற்றும் மூன்று மிளகை எடுத்து கொள்ளவும் .இந்த பொருட்களை வைத்து எப்படி அந்த எடை குறையும் பானம் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்
4.முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி விதை மற்றும் மிளகு இட்டு அதை மெல்லிய தீயில் வறுத்தெடுக்க வேண்டும்.
5.அடுத்து வறுத்தெடுத்ததை மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
6.அடுத்து அரைத்து எடுத்த பொடியுடன் லவங்கம்பட்டை பொடியையும் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
7.இறுதியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதனுடன் சேர்த்து வைத்த கலவையை கலக்கவும்.
8.இவ்வாறு செய்து எடுத்து அதை வடிக்கட்டி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.
9.இதை தினமும் இரவு மற்றும் காலையில் கட்டாயம் குடிக்க வேண்டும்.
10.இவ்வாறு செய்தால் உடல் எடை நிச்சயமாக குறையும்.


