சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளுக்கு வரும் பல்வலியை ஒரு வழி பண்ணலாம் வாங்க

child good habit tips

பெரியவர்களுக்கே பல் வலி வந்தால் தாங்க முடியாத போது வளரும் பிள்ளைகளுக்கு பல் வலி வந்தால் அதிக உபாதையை எதிர்கொள்வார்கள்.
 
பல் வலி உபாதையை பெரியவர்களை விட வளரும் குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கிறது. ஏனெனில் எப்போதும் இனிப்புகளை மட்டுமே சாப்பிடும் குழந்தைகள் அடிக்கடி பல் சிதைவு உட்பட கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

குழந்தைகள் பல் வலியை தாங்க மாட்டார்கள்.  அதிக பல் வலியை எதிர்கொண்டால் தாமதிக்காமல் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் என்ன ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

​பல்வலி பிரச்சனை

எல்லாவிதமான நோய்களுக்கும் ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சைகள் உண்டு. ஆயுர்வேதம் நோய்க்கான சிகிச்சையை தாண்டி நோயை உண்டாக்கும் காரணங்களை குணப்படுத்துவதால் சற்று தாமதமான நிலையில் குணமடைந்தாலும் பக்கவிளைவில்லாத நிரந்தர தீர்வாக இருக்கும்

மாதம் ஒரு முறை நல்லெண்ணெயை வாயில் ஊற்றி  நன்றாக கொப்பளித்து பின்பு துப்ப வேண்டும்.இது ஆயில் புல்லிங் எனப்படும்.இது பற்களுக்கும் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.

பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்றவை அனைவருக்கும் காணப்படும் பரவலான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படுகின்றது.பலதரப்பட்ட இனிப்புகள்,சாக்லேட்டுகள்,துரித உணவுகள் போன்றவை பற்களுக்கு எதிரிகளாகின்றன.

இதனால் பல்வலி பிரச்சனையும் பரவலாகிவிட்டது.பல்வலி திடீரென்று ஏற்பட்டால் செய்ய வேண்டிய எளிமையான வீட்டு வைத்தியத்தினை காணலாம்.

கால் டீ.ஸ்பூன் கல்லுப்பினை ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.காலை,மாலை மற்றும் இரவு என மூன்று நேரம் வாயை கொப்பளிக்க வேண்டும்.இதனுடன் மஞ்சள் தூளும் சுரத்து கொள்ளலாம்.பல் வலி படி படியாக குறையும்.

2.கொய்யா இலை வைத்தியம்

கொய்யா இலைகள் கொழுந்தாக இருந்தால் அப்படியே மென்று சாப்பிடலாம். கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக சுண்டியதும் அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

3.கிராம்பு வைத்தியம்

இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.கிராம்பு எண்ணெய்யும் பல் வலி உள்ள இடத்தில தடவலாம்.

4.புதினா இலைகள்

கைப்பிடி அளவு புதினா இலைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் ஆறியதும் சிறிது சிறிதாக குடிக்கலாம்.அந்த தண்ணீரை வைத்து வாயை நன்றாக கொப்பளிக்கலாம்.

5.சின்ன வெங்காயம்

சின்ன  வெங்காயத்தை அதன் சாறு வெளிவருமாறு இடிக்கவும்.அதனை பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும்.

6.வேப்பமர பட்டை

வேப்பமர பட்டை  வேப்ப மரப்பட்டையோடு ஆறு கிராம்பு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

7.கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும்.

8.ஆயில் புல்லிங்

பெரியவர்களுக்கே பல் வலி வந்தால் தாங்க முடியாத போது வளரும் பிள்ளைகளுக்கு பல் வலி வந்தால் அதிக உபாதையை எதிர்கொள்வார்கள்.
 
பல் வலி உபாதையை பெரியவர்களை விட வளரும் குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கிறது. ஏனெனில் எப்போதும் இனிப்புகளை மட்டுமே சாப்பிடும் குழந்தைகள் அடிக்கடி பல் சிதைவு உட்பட கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

குழந்தைகள் பல் வலியை தாங்க மாட்டார்கள். அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது என்றாலும் இரவு நேரங்களில் அதிக பல் வலியை எதிர்கொண்டால் தாமதிக்காமல் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் என்ன ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

​பல்வலி பிரச்சனை

எல்லாவிதமான நோய்களுக்கும் ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சைகள் உண்டு. ஆயுர்வேதம் நோய்க்கான சிகிச்சையை தாண்டி நோயை உண்டாக்கும் காரணங்களை குணப்படுத்துவதால் சற்று தாமதமான நிலையில் குணமடைந்தாலும் பக்கவிளைவில்லாத நிரந்தர தீர்வாக இருக்கும்

மாதம் ஒரு முறை நல்லெண்ணெயை வாயில் ஊற்றி  நன்றாக கொப்பளித்து பின்பு துப்ப வேண்டும்.இது ஆயில் புல்லிங் எனப்படும்.இது பற்களுக்கும் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.

பற்களை பாதுகாக்கும் முறை

காலை, இரவு என இருவேளையும் பல் துலக்குவது நல்லது.

3 மாதத்துக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

அதிக குளிர்ச்சியான அல்லது அதிக சூடான உணவுகளை உண்ண கூடாது.

குழந்தைக்ளுக்கு சாக்லேட்டுகள்,ஐஸ் கிரீம்கள் போன்றவற்றை தரக்கூடாது.

சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பது அவசியம்.குழந்தைகளுக்கும் கற்று தாருங்கள்.

அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.

உடல் நிலை சரில்லையென்றால் டூத் பிரஷை உடனடியாக மாற்றவும்.