சொத்தை பற்களை செலவில்லாமல் சரி செய்யும் சுலபமான முறைகள்

 
tooth tooth

பல் சொத்தை என்பது பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பொதுவான பிரச்னை என்கிறது உலக சுகாதார நிறுவனம். இது மிகவும் பரவலான, அதேசமயம் தொற்று அல்லாத ஒரு நோய்(non-communicable disease). பல் சிதைவை பொறுத்தவரை பல்லின் மேற்பகுதி, அதாவது எனாமல் சேதமடைந்து சிறுசிறு துளைகள் உருவாகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு பாக்டீரியா தொற்றால் பல் சொத்தையாகிறது. சிலருக்கு அதிக சர்க்கரை உணவுகள், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகள், வாய் வறட்சி மற்றும் பல்லை சுத்தமாக வைத்திருக்காமை போன்ற காரணங்களால் பற்சொத்தை உருவாகிறது. சிலருக்கு உணவு சார்ந்த பிரச்னைகள் மற்றும் உடலில் அமில சுரப்புகள் மாற்றத்தால் பற்சொத்தை ஏற்படுகிறது.

சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் வைரஸ்கள் அதிகமாக பெருகி பற்களை தாங்கும் எலும்புகளில் தொற்றுக்களை ஏற்படுத்து கிறது, இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த சொத்தை பல் சரியாக சில வழிகளை பின்பற்றினால் போதும் இந்த சொத்தை பல் பிரச்சனை முழுவதும் சரிசெய்துவிட முடியும்.

பொதுவாக பல் சொத்தை பிரச்சினைகள் அனைவருக்கும் இருக்கும் பல் சொத்தை ஏற்பட முக்கிய காரணம் அதிகம் சுவையுள்ள இனிப்பு உணவுகளை சாப்பிடுவது தான்.

 

அதேபோல் எந்த உணவுகளை சாப்பிட்டாலும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் இந்த சொத்தை பல் வர முக்கிய காரணம்.

இந்த சொத்தைப் பற்களை தொடக்கத்தில் சரிசெய்ய விட்டால் அதன் பிறகு பற்களில் சிறிய ஓட்டைகள் உருவாக்கிய பிறகு மற்ற பற்களில் சொத்தை விழ ஆரம்பித்து விடும்.

மற்றும் ஈறுகளில் நோய் தொற்று ஏற்பட்டு பற்களில் மற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

பல் சொத்தை குணமாக பாட்டி வைத்தியம் ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்கள் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

 

அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதையும் முழுமையாகத் தடுக்கலாம்.

சொத்தைப்பல் குணமாக உப்புத்தண்ணீர்

தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பல் துலக்குவதற்கு முன் ஒரு நிமிடம் வாயில் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் மூன்று வேளை உட்கொள்ள முன் செய்து வந்தால் பற்கல் சொத்தை இருந்து விடுபடலாம்.

சொத்தைப்பல் குணமாக மஞ்சள்

மஞ்சள் தூளை சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேய்த்து 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும், இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப்பல் பிரச்சனை முழுவதும் குணமாகும்.

சொத்தைப்பல் குணமாக வேப்பிலை

வேப்பிலை சாறு சொத்தைப் பற்கள் மீது தேய்த்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாய்ப்பளிக்க வேண்டும்.

முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சினைகளும் குணமாகிவிடும்.

சொத்தைப்பல் குணமாக பூண்டு

பல் சொத்தை பாட்டி வைத்தியம் 4 பூண்டு பற்களை எடுத்து நன்றாகத் தட்டி அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தை பற்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும்.

இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், முழுமையாக அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நாளடைவில் பல் சொத்தை நீங்கிவிடும்.

சொத்தைப்பல் குணமாக கிராம்பு

சொத்தைப் பற்கள் பிரச்சனைகள் விரைவில் குணமாக தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு 3 துளிகள் கிராம்பு எண்ணெய்யை 1/4 டேபிள் டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து சொத்தைப்பல் மீது போடவும்