காலையில் இந்த உணவுகளை சாப்பிட்டா உங்க எடையை எவ்ளோ சீக்கிரம் குறைக்கலாம் தெரியுமா?

 
memory loss

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ஃபாஸ்டிங் செய்வது, மிக குறைவாக சாப்பிடுவது, தினசரி முன்று வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை உணவு சாப்பிடுவது, டயட் உணவு முறையை பின்பற்றுவது என பல்வேறு எடைஇழப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், ஆரம்பகட்டத்தில் இந்த எடை குறைப்பு முயற்சியில் பலர் தீவிரமாக ஈடுபட்டாலும், நாளடைவில் ஆரோக்கியமான டயட் உணவுகளை கடைபிடிப்பதை நிறுத்துகின்றனர். மேலும் உணவு கட்டுப்பட்டால் விரக்தி அடைந்து மீண்டும் பழைய உணவுமுறைக்கு மாறிவிடுகின்றனர். ஏனெனில் அவர்களால் பசியை கட்டுப்படுத்த முடியாது. எடை குறைப்பு விஷயத்தில் எந்த ஒரு செயல்களையும் தொடர்ந்து சரியாக பின்பற்றாவிடில் உடல் எடையை குறைக்க முடியாது.

உடல் எடையை குறைக்க டிப்ஸ்

உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலை உணவை தவிர்ப்பது தவறு.

ஏனெனில், இதனால் பசி மற்றும் இடைவேளைகளில் உணவு உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கும்.

இந்த இடைவேளை உணவுப் பழக்கம் தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாகும்.

எனவே, காலை உணவில் சிலவகை உணவுகள் உடல் எடையை தவிர்க்க உதவும்.

இலவங்கப் பட்டை

கலோரிகள் இல்லமால் உணவில் இனிப்பு சுவையை சேர்க்கும் தன்மைக் கொண்டது இலவங்கப் பட்டை.

தானிய உணவுகள், ஓட்ஸ் மீல்ஸ், ஏன் காபியில் கூட கொஞ்சம் இலவங்கப் பட்டை தூவி உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலில் சர்க்கரை மூலம் சேரும் கலோரிகளை குறைக்கவும் பயனளிக்கிறது.

இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை குறைக்க முடியும்.

முட்டை

முட்டையில் புரதம், விட்டமின் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இவை காலையில் உங்கள் உடற்சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.

மேலும், முட்டை குறைந்த கலோரியில் பசியை நிறைவு செய்யவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

பழங்கள்

பழங்களில் இருப்பது இயற்கை இனிப்பு. மேலும், இவை இரத்தத்தில் உடனடியாக கலக்காது என்பதால், இரத்த சர்க்கரை அதிகரிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கிறது.

நட்ஸ் பால்

நட்ஸ் கலந்த பால் பருகுங்கள். இதில் இருப்பது இயற்கை சர்க்கரை. மற்றும் கலோரிகள் குறைவு, உடற்சக்தியை ஊக்குவித்து, உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம். இதில் சர்க்கரை அளவு அறவே இல்லை. மற்றும் பசியை குறைத்து, உடல் எடையை குறைக்க இதுவொரு சிறந்த உணவாகும்