மன அழுத்தம் குறைய மிகவும் எளிமையான வழி என்ன தெரியுமா ?
இன்றைய அவசர காலத்தில் மன அழுத்தம் பலருக்கும் ஏற்படுகிறது .இதற்கு ஆபீஸ் மற்றும் குடும்பமும் ஒரு காரணமாகும் .இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடியாமல் பலர் தவிக்கின்றனர் .இதற்கு மன நல ஆலோசகரிடம் சென்றால் எங்கே தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற பயத்தில் பலர் அந்த கோளாறுடனே வாழ்ந்து வருகின்றனர் .இந்த மன அழுத்தத்தை பின்வரும் வழிகளில் குறைக்கலாம்
1.சிலருக்கு மன அழுத்தம் அடிக்கடி ஏற்படும் .இந்த அழுத்தம் குறைய மிகவும் எளிமையான வழி உடற்பயிற்சியாகும்.
2.ஒருவர் தினமும் செய்யும் உடற்பயிற்சி உடலையும் மனதையும் புத்துணர்வோடு மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
3.நடைபயிற்சி ஒரு சிறந்த உடல் உடற்பயிற்சி. இந்த வாக்கிங் எதிர்மறை எண்ணங்களை குறைக்கவும் உதவுகின்றது.
4.மன அழுத்தம் குறைய தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தலாம் ,
5.ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில வழிமுறைகளாகும்
6.நமது உடல் இயக்கம் நன்றாக வேலை செய்ய மூளைக்கு தேவையானவைகளில் முக்கியமானவை ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
7.மூளையின் செயல் திறனுக்கு ,ஒமிக்ரான்3, அமினோ அமினங்கள் விட்டமின் B, விட்டமின் C, துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாது உப்புக்கள் தேவை ஆகும்.
8.மேற்கூறிய பொருட்கள் வலிமையான மனதில் ஆரோக்கியத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.
9.மன அழுத்தத்தை குறைப்பதில் ஆலிவ் எண்ணெய், பசுமையான இலைகளைக் கொண்ட கீரை வகைகள், காய்கறிகள் போன்றவைமுக்கிய பங்காற்றும் .
10.அதிகாலையில் எழுந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகும்

