கொலஸ்ட்ராலை குறைக்கும் குறுக்கு வழிகள்

 
fat fat

பொதுவாக சில  உணவுகள் கண்ணை கவரும் பல வண்ணங்களில் இருப்பதாலும் ,நாவிற்கு சுவை அதிகம் கொடுப்பதாலும் அதை குழந்தைகளும் விரும்பி உண்கின்றனர் .ஆனால் இதனால் நாளடைவில் கொலஸ்ட்ரால்  பிரச்சனை உண்டாகிறது .இந்த கொலஸ்ட்ரால் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருப்பது எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாமல் சைலெண்டாக இருக்கும் .
2.ஆகவே பெற்றோராகிய நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டால் தான் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருப்பதை அறிந்து கொண்டு அவர்களை பாதுகாக்க முடியும் .
3.சிலர் தங்களின் குழந்தைக்கு ஜங்க் புட் வாங்கி கொடுப்பர் .இந்த  எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

fat
4.சிலர் அடிக்கடி இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுப்பர் .அதிகளவு இனிப்பு பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
5.சிலர்  தங்களின் குழந்தைக்கு இனிப்பு பொருட்கள் மற்றும் கேக் வாங்கி கொடுப்பர் .இந்த  உணவுகளில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால், இவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து விடுகிறது.
6.சிலரின் குழந்தைகுண்டாக காணப்படும் .இந்த குண்டு காரணமாக வந்த கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க குழந்தைகளை தினசரி உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும்.
7.தினந்தோறும் அறுபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், குழந்தைகளின் உடலில் இருக்கும் அதிகளவிலான கொலஸ்ட்ரால் குறைந்து அழகாக குழந்தை காணப்படும்