ஆரோக்கியமாக வாழ ஐந்து அதிகாலை பழக்கங்கள்

 
Morning people may have the lower breast cancer risk Morning people may have the lower breast cancer risk

 இப்போதெல்லாம் அனைவரும் காலையில் தூங்கி எழுந்ததும் செல்போனைத்தான் பார்க்கின்றனர் .காலையிலேயே அதில் வரும் நெகட்டிவ் விஷயங்கள் நம் மனதை பாதிக்கின்றது .ஆனால் நம் முன்னோர்கள் காலையில் குளித்து விட்டு தியானம் செய்து மனதை ஒழுங்கு படுத்தி வந்தனர்.மேலும் இன்றைய தலைமுறை தூங்குவதே இரவு 12 மணிக்கு மேல் என்பதால் சூரியனை பார்ப்பதே அரிதான விஷயம் அவர்களுக்கு .ஆனால் பின்வரும் ஐந்து விஷயங்களை இனியாவது கடை பிடியுங்கள் 

தினமும் அதிகாலையில் நீங்கள் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

1.இளைஞர்களே இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் .அதிகாலை தூங்கி எழுந்தவுடன் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை தினமும் நீங்கள் தியானம் செய்தால் உங்கள் மனம் உங்கள் புத்துணர்வோடு இருந்து நீங்கள் ஆரோக்கியமாய் இருப்பீர்கள் 

2.காலை எழுந்ததும் பெட் காப்பி குடித்து குடலை கெடுத்து கொள்வதை விட, உங்கள் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சி பெற அதிகாலையில் சோம்பு அல்லது சீரகம் கலந்த வெதுவெதுப்பான சூடான நீரை பருகி ஆரோக்கியமாய் இருங்கள் 

seeragam

3.காலையில் சூரிய நமஸ்காரம், உயிர் மூச்சு, ஹா மூச்சு போன்ற யோகப் பயிற்சிகளை செய்வதால் உடம்பில் ஏற்படும்  மாற்றங்களை நீங்கள் விரைவில் உணரலாம் .இது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாய் வைத்திருக்கும்

4. அதிகாலை 6 மணிமுதல் 7 மணிக்குள்  எக்சர்சைஸ் அல்லது வாக்கிங் செய்தால் உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகமாகி நோயின்றி வாழலாம்

5. சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு 4 முதல் 6 நிமிடங்கள் வரை வாயில் கொப்பளிக்க வேண்டும். இதை எண்ணெய் இழுத்தல் என்று கூறுவர் .இதனால் லாரிக் அமிலம் உண்டாகி , இது உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழித்து உங்கள் ஆரோக்கியம் மேம்படும் .