நீங்கள் செய்யும் இந்த தவறால் உங்க கிட்னி சீக்கிரம் கெட்டுவிடும்

நம் உடலில் இதயம் ,கல்லீரலுக்கு இணையான முக்கியமான உறுப்பு கிட்னி .இந்த கிட்னி நம் உடலில் பல்வேறு பணிகளை செய்கிறது .இது நம் உடலில் ரத்தத்ததை சுத்திகரிப்பு செய்யும் மிக முக்கிய வேலையை செய்கிறது .இந்த முக்கியமான கிட்னியை நாம் சில தவறுகள் மூலம் கெடுத்து கொள்கிறோம் .எந்த தவறு மூலம் கிட்னி கெட்டு போகிறது என்று இந்த பதிவின் மூலம் அறியலாம்
1.சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது கிட்னி கெட்டு போக ஒரு காரணம்
2.போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கிட்னி கெட்டு போக வாய்ப்புள்ளது
3.உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்தால் எதிர்காலத்தில் கிட்னி கெட வாய்ப்புள்ளது
4.அதிக அளவில் மது அருந்துதல் கூட கிட்னியை கூடிய விரைவில் பாழாக்கி விடும்
5.வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் எடுத்தால் அது கூடிய சீக்கிரம் கிட்னியை கெடுத்து விடும்
6.பட்டினி கிடப்பது கூட எதிர்காலத்தில் கிட்னியை கெடுத்து விட வாய்ப்புள்ளது
இப்படி பட்ட செயல்களை தொடர்ந்து செய்யும் பொழுது நமது சிறுநீரகம் விரைவில் பாதிப்படையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்