இளம் வயதிலே வழுக்கை விழாமலிருக்க உதவும் வழிகள்
பொதுவாக தலையில் முடி இருந்தால்த்தான் அவருக்கு அழகு .ஆனால் இந்த முடி இப்போது இளம் வயதினருக்கும் உதிர ஆரம்பிக்கிறது .இதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்வியல் முறையும் ,உணவு முறையும் ஒரு காரணம் .எனவே இளம் வயதிலேயே வழுக்கை விழாமலிருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு இளம் வயதிலேயே முடி உதிரும் .ஆண்ட்ரோஜன் அளவு போன்ற உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்வதற்குக் காரணம்.

2.சிலர் அதிக மன அழுத்தம் அல்லது பதட்டத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், முடி உதிர்தல் பிரச்சனை அவருக்கு ஏற்பட வாய்ப்புண்டு
3.சில பெண்களின் கூந்தலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் முடி உதிர்வதுடன், முடியின் வேர்களும் பலவீனமடையும்.
4.ஒருவரின் முடி ஆரோக்கியத்திற்கு சரியான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் தேவை, அவை இல்லாததால் அவருக்கு முடி உதிர்தல் ஏற்படலாம்.
5.சிலருக்கு சிறு வயதிலேயே முடி உதிர்தலுக்கான காரணம் மரபணு . இந்த மரபணு காரணி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரையுமே பாதித்து முடி உதிர்கிறது .
6.ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா என்பது ஒரு சிக்கலான மரபணு தடயமாகும். இது முடி உதிர்தலை ஏற்படுத்தி வழுக்கை உண்டாக்குகிறது .
7.மேலும் சிறு வயதிலேயே முடி உதிர்வதற்கு சில மருந்துகளும் முக்கிய காரணமாக இருக்கிறது .
8.புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கீமோதெரபி மருந்துகளின் பயன்பாடு கூட முடி உதிர்தலுக்கு மிகப்பெரிய காரணமாக அமைய வாய்ப்புள்ளது
9.இது தவிர, ஆட்டோ இம்யூன் கோளாறுகளும் முடி உதிர்தலுக்கு காரணமாகும்,
10.ஏனெனில் இதில் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு முடியின் வேர்களை பலவீனப்படுத்தி வழுக்கை விழ காரணமாக இருக்கிறது .


