கற்றாழைக்குள் அடங்கியிருக்கும் வற்றாத ஆரோக்கியம் .

 
katrazhai

கற்றாழையை ஒரு காய கல்ப மூலிகை என்று கூறுமளவுக்கு அதில்  ஆரோக்கியம் அடங்கியுள்ளது .இது உடலுக்கு மட்டுல்லாமல் நம் முக அழகுக்கும் ஆரோக்கியம் தர கூடியது .இது சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற பெண்களுக்கு உண்டாகும் நோய்களை குணப்படுத்தும் .கற்றாழையை சூடு படுத்தி நமக்கு அடிபட்ட இடத்திலோ அல்லது சிவப்பான தடிப்பான இடத்திலோ பூசி வந்தால் குணமாகும் .கற்றாழை சாறுடன் வெண்ணெய் வால்மிளகு தூள்  சாப்பிட்டால் உடல் சூடு ,சிறுநீர் கடுப்பு ,உடல் வெப்பம் குணமாகும் .இந்த கற்றாழையுடன் நல்லெண்னெய் சேர்த்து தலையில் தேய்த்தல் முடி நன்றாக வளரும் ,மேலும் சில ஆரோக்கிய குறிப்புகளை பார்க்கலாம் 

aloevira

1.கற்றாழையில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லானது சருமத்தில் கொலாஜன் செல் உற்பத்தியை அதிகரிக்கும்.

2.ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் இளமை தோற்றத்துடன் காணப்படும்.

3.கற்றாழை ஜெல் முகப்பருவை குறைக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

4. கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு  செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.