சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கறவங்களுக்கு என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
eating procedure to avoid diseases

சிலர் சாப்பாட்டுக்கு இடையே நிறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் மற்றும் குளிர் பானங்களை குடிப்பார்கள் .இப்படி சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிப்பது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் .குறிப்பாக அது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும் .ஏனெனில் அது செரிமானத்துக்கு உதவும் உமிழ் நீரை மிகவும் பாதிக்கும் .

eat

எடை அதிகரிக்கும்:

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் முக்கிய பாதிப்பு உடல் எடை அதிகரிப்பு .எப்படியெனில் அந்த நீரால் செரிமான பிரச்சினை ஏற்பட்டு தேங்கியிருக்கும் உணவு கொழுப்பாக மாறி உடல் எடையை கூட்டுகிறது .அதனால் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பின்பு தண்ணீர் குடிப்பது நம் வயிற்றுக்கு நலம் சேர்க்கும் .

இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும்:

சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பது அசிடிட்டி பிரச்சினையை ஏற்படுத்தும் .. அதிக தண்ணீர் அல்லது திரவம் gastric juices-களை நீர்த்து போக செய்து, செரிமான செயல்முறையை பாதித்து அந்த செயலை மெதுவாக்கும்  நமது உடலில் செரிமானமாகாத உணவுகள் இருக்கும் போது ஆசிட் ரிஃப்லெக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படுத்தி அது உடலை மிகவும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

:

 உணவுடன் திரவங்களை குடிப்பது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இதனால் உடல் எடை அதிகரிக்கும். இது தண்ணீருக்கு மட்டுமல்ல, உணவோடு ஜூஸ் அல்லது சோடா குடிப்பதும் இன்சுலின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி நாளடைவில் சர்க்கரை நோயை  நம் உடலில் உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்