தைராய்டை மாத்திரையில்லாமல் துரத்துவது எப்படி ?

 
tablet

உலகில் சர்க்கரை நோய்க்கு அடுத்த படியாக கோடிக்கணக்கானோர் பாதித்திருப்பது தைராய்டு நோயால்தான் .எனவே அதற்கு ஆங்கில வைத்யத்தில் மாத்திரை ஆயுள் முழுவதும் சுகருக்கு கொடுப்பது போல கொடுக்கின்றனர் .எனவே இயற்கையான முரையில் தைராய்டை விரட்டும் வழி பற்றி இந்த பதிவில் காணலாம்

thyroid

,  நம் உடலில் தைராய்டு சுரப்பியை தூண்டுவதற்கு அயோடின் தாது அவசியமாகும். தைராய்டை தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகப்படுத்தும் இயல்பு அயோடினுக்கு உண்டு. மேசை உப்பு, மீன், பால் பொருள்கள், முட்டை ஆகியவை அயோடின் சத்து உடலில் சேருவதற்கு உதவும். நார்ச்சத்து தைராய்டு குறைபாடு இருப்போர், உடல் எடையை குறைப்பதற்கு நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். நார்ச்சத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்றும். பழங்கள், காய்கறிகள், பயிறுகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடவேண்டும். செலினியம் தைராய்டை தூண்டக்கூடிய ஹார்மோன் உடலில் அதிகம் சுரப்பதற்கு செலினியம் தாது உதவும். உடல் எடை அதிகரிப்பதற்கு நிலையற்ற அணுக்களான (ஃப்ரீ ராடிகல்ஸ்) காரணமாகின்றன. செலினியம் ஃப்ரீ ராடிகல்ஸை குறைக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை செலினியம் அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறைக்க வேண்டியவை சர்க்கரை அதிகமுள்ள உணவு, சிறுதானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோயா வகைகள், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, பிரெக்கோலி, காலிபிளவர், முட்டைகோஸ் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது, போதிய நீர் அருந்துவது, சாப்பாட்டு அளவை குறைத்துக்கொள்வது ஆகியவை தைராய்டு பிரச்னையை கட்டுப்படுத்த உதவும்..

மேற் சொன்ன இயற்கை வழிகளை பின்பற்றி இந்த தைராய்டை  ஒண்ணுமில்லாமல் செய்யலாம்