துளசியோட தேன் கலந்து கொடுத்தா ,குழந்தைக்கு என்னென்ன கோளாறு குணமாகும் தெரியுமா ?

 
child foods upto age six

இப்பல்லாம் ஏதேதோ பெயர்ல புதுப்புது காய்ச்சல் வந்துட்டே தான் இருக்கு... நாட்டு  வைத்தியத்துல துளசி காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வு. அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் துளசியோட மருத்துவ குணங்கள கண்டறிஞ்சு சொல்லியிருக்காங்க. 10 துளசி இலையோட 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி வடிகட்டி குடிச்சா காய்ச்சல் படிப்படியா குறையும்.

துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து கிடப்பதால் தான் மக்கள் அதை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தின் படி இந்த துளசி இலைகளை புனித துளசி என்று அழைக்கின்றனர். இந்த துளசி பெரும்பாலும் தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்க கூடியது. இதைக் கொண்டு பல வீட்டு வைத்தியங்கள் செய்யப்படுகிறது.


துளசி குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

சளி இருமலுக்கு மருந்தாகும் துளசி!

சளிக்கு நல்ல மருந்து இந்த துளசி. உடல்ல வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுது, உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதுக்கு உண்டு. துளசி சாறுகூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தா குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.

துளசி செடி, துளசி பயன்கள், Thulasi uses in tamil

துளசி செடி தீர்க்கும் நாட்பட்ட நோய்கள்!

இப்பல்லாம் சர்க்கரை நோயை ஏதோ சொத்து சம்பாதிச்சு வைக்குற மாதிரி பெருமையா சொல்லிக்குறாங்க. முக்கியமா 'நீரிழிவு, உடல் பருமன்' இதெல்லாம் 35 வயசு தாண்டுனாலே பலருக்கும் வந்திடுது. தினமும் சில துளசி இலைகளை மென்னு தின்னாலே சர்க்கரை அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தா கொஞ்சம் கொஞ்சமா உடல் எடை குறையும்.

தோல் நோய்களுக்கும் துளசி மருந்தாகும்!

துளசி இலைய எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலைகூட, அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்”

“சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை எடுத்து, அதில் ஒரு கைப்பிடி துளசியப் போட்டு 8 மணி நேரம் மூடி வச்சு அப்புறமா அந்த நீரைக் குடிச்சிட்டு வரணும். இத வெறும் வயித்துல 48 நாட்கள் குடிச்சுட்டு வந்தாலே எந்த நோயும் அண்டாது. அதோட தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும். எப்பவும் இளமையா இருக்கலாம்

தினமும் துளசி இலைய மென்னு சாறை விழுங்கி வந்தா குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்சனைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றமும் இருக்காது. உடல்ல வியர்வை நாற்றம் பற்றி கவலைப்படுறவங்க, குளிக்குற தண்ணியில முந்தைய நாளே துளசி இலைகள ஊறவைச்சு அந்த தண்ணியில குளிச்சிட்டு வந்தா வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.”